சுவையான பேபி கார்ன் கிரேவி செய்வது குறித்து இங்கு பார்ப்போம். இந்த கிரேவியை சப்பாத்தி, பூரி, தோசைக்கு வைத்து சாப்பிட சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
பேபி கார்ன் -5
பட்டாணி- 100 கிராம்
தேங்காய்- 1 கப்
கசகசா- 1 ஸ்பூன்
சோம்பு- 1 ஸ்பூன்
உடைத்த கடலை- 1 ஸ்பூன்
முந்திரி- 5
பட்டர்- 1 ஸ்பூன்
பட்டை-1
லவங்கம்- 2
சீரகம்- 1 ஸ்பூன்
பச்சை மிளகாய், கொத்தமல்லித் தழை- 1 கைப்பிடி
செய்முறை
முதலில் ஒயிட் கிரேவி செய்ய மிக்ஸி ஜார் எடுத்து அதில் தேங்காய், கசகசா, சோம்பு, பச்சை மிளகாய், வெங்காயம், முந்திரி, தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்க வேண்டும். பேஸ்ட் பதத்திற்கு அரைக்கவும்.
அடுத்து இப்போது அடுப்பில் கடாய் வைத்து அதில் வெண்ணெய் போட்டு அதில் பட்டை, லவங்கம், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும். அடுத்து நறுக்கி வைத்துள்ள பேபி கார்ன் சேர்த்து வதக்கவும். பின்னர் பட்டாணி இதற்கு தேவையான அளவு சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும். சிறிதளவு உப்பு சேர்க்கவும், ஏனென்றால் முன்னதாகவே ஒயிட் கிரேவியில் உப்பு சேர்த்துள்ளோம்.
இப்போது ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள ஒயிட் கிரேவி மசாலாவை சேர்த்து வதக்கி கொதிக்க விடவும். கொட்டியாக கிரேவி பதத்திற்கு வந்ததும் கடைசியாக கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கினால் கமகம கிரீமி பேபி கார்ன் ஒயிட் கிரேவி ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“