நடிகர் கார்த்தி கல்யாணத்தில், மாதம்பட்டி ரங்கராஜ் விருந்து சமைத்துள்ளார். இதில் கார்த்தி அவரிடம் கேட்டு செய்யச் சொன்ன க்ரிஸ்பி பாலக் ரெசிபியை நீங்களும் செய்யலாம்.
தேவையான பொருட்கள்
பாலக் கீரை நறுக்கியது 3 கப்
கால் கப் கான்பிளவர்
எண்ணெய்
1 ஸ்பூன் பூண்டு நறுக்கியது
1 ஸ்பூன் இஞ்சி நறுக்கியது
4 பச்சை மிளகாய் நறுக்கியது
3 சிவப்பு மிளகாய் நறுக்கியது
2 ஸ்பூன் சோயா சாஸ்
அரை ஸ்பூன் வினிகர்
3 ஸ்பூன் வெள்ளை எள்ளு
தேவையான அளவு உப்பு
செய்முறை : பாலக் கீரையை நறுக்க வேண்டும். அதில் கான்பிளவர் சேர்த்து கிளரவும். சூடான எண்ணெய்யில் போட்டு மிதமாக பொறிக்கவும். இந்நிலையில் பொறித்து எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் சிறிய அளவு எண்ணெய் சேர்த்து, அதில் நறுக்கிய பூண்டு, இஞ்சி, மிளகாய், சோயா சாஸ், வினிகர் சேர்த்து கிளரவும். தொடர்ந்து வெள்ளை எள்ளு சேர்த்து கிளரவும். கடைசியாக உப்பு அளவு சேர்த்து கிளரவும்.