சோளத்தில் பணியாரம் செய்தால் மிகவும் ஆரோக்கியம் என்பதால் சித்த மருத்துவர் சிவராமன் வீட்டு திருமணத்தில் சோள பணியாரம் செய்யப்பட்டது. அதன் ரெசிபி இதோ.
தேவையான பொருட்கள்
அரை கிலோ வெள்ளை சோளம்
100 கிராம் வெள்ளை உளுந்து
கால் கிலோ பச்சரிசி
1 டேபிள் ஸ்பூன் வெந்தயம்
எண்ணெய் தேவையான அளவு
அரை ஸ்பூன் கடுகு
1 வெங்காயம் நறுக்கியது
அரை இஞ்சி நறுக்கியது
3 பச்சை மிளகாய் நறுக்கியது
செய்முறை: சோளத்தை மிக்ஸியில் சேர்த்து அரைக்க வேண்டும். தொடர்ந்து இதை பச்சரிசி, உளுந்து, வெந்தயத்துடன் 4 மணி நேரம் ஊற வைக்கவும். தொடர்ந்து இதை அரைத்துகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய், கடுகு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும், இதை மாவில் சேர்த்து கிளரவும். உப்பு சேர்த்துகொள்ளவும். தொடர்ந்து பணியாரம் செய்யும் பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து குழி பணியாரம் ஊற்றவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“