சுவை, ஹெல்தியான வெள்ளரிக்காய் மசாலா ரொட்டி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
வெள்ளரிக்காய் – 1
கோதுமை மாவு – 1 கப்
கொத்தமல்லி இலை – தேவையான அளவு
பச்சை மிளகாய் – 3
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை
கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். வெள்ளரிக்காயை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, துருவிய வெள்ளரிக்காய், கொத்தமல்லி தழை, நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் உப்பை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். அடுத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
இப்போது அடுப்பில் தோசை கல் வைத்து மாவை ரொட்டு போல் மொத்தமாக ஊற்றவும். சுற்றி எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு இருபுறமும் வேக வைத்து எடுக்கவும். அவ்வளவு தான் சுவையான ஹெல்தியான வெள்ளரிக்காய் மசாலா ரொட்டி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“