சுவை, ஆரோக்கியமான வெள்ளரிக்காய் ரொட்டி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
வெள்ளரிக்காய் – 1
கோதுமை மாவு – 1 கப்
கொத்தமல்லி இலை – தேவையான அளவு
பச்சை மிளகாய் – 3
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். வெள்ளரிக்காயை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும். இப்போது ஒரு பாத்திரம் எடுத்து அதில் கோதுமை மாவு, துருவிய வெள்ளரிக்காய், கொத்தமல்லி இலை, பச்சை மிளகாய் மற்றும் உப்பை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
இப்போது அடுப்பில் தோசை கல் வைத்து சூடானதும் மாவை ஊற்றி சற்று கெட்டியாகத் தான் இருக்கும். ரொட்டி போல் பரப்பி விடவும். சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி இருபுறமும் வேக வைத்து எடுக்கவும். அவ்வளவு தான் சுவையான, ஆரோக்கியமான வெள்ளரிக்காய் ரொட்டி தயார். சட்னி அல்லது சாம்பாருடன் வைது சாப்பிடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“