Cucumber Tamil News: அனைவருமே ஏதேனும் விஷேங்களுக்கு மட்டுமின்றி தினமும் அலுவலகம், கல்லூரிகளுக்கு செல்லும் போதும் கூட பளிச்சென்று அழகாக செல்ல வேண்டும் என்று தான் நினைக்கிறோம். ஆனால் பார்லர்களுக்கு சென்று முகத்தை அழகுபடுத்திக்கொண்டால் குறைந்தது ஆயிரம் ரூபாயாவது செலவாகும்.
Advertisment
ஆனால், கோடைக்காலத்தில் அதிகம் கிடைக்கும் நீர்ச்சத்து நிறைந்த வெள்ளரிக்காயை கொண்டு சருமத்தை முறையாக அழகு நிலையங்களில் பராமரிப்பது போன்றே செய்யலாம்.வெள்ளரிக்காய் 96 சதவீதம் நீரைக் கொண்டிருக்கிறது. வெள்ளரிக்காயை உட்கொள்வதால் முகத்திற்கு மாய்ஸ்சரைஸ்ரே தேவையில்லை. அதுவே சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைத்து வறட்சிகளின்றி பராமரிக்கும்.சூரிய ஒளியால் ஏற்படும் கருமையை நீக்கி முகத்தின் நிறத்தை சீராக்குகிறது. சருமத்தில் ஏற்படும் தோல் அலர்ஜி போன்றவற்றை நீக்கி தெளிவாக்குகிறது.
Vellarikai Skin Care Benefits: முகம் அழகுக்கு வெள்ளரிக்காய்
பார்லர்களின் ஃபேஷியல் மாஸ்க் அப்ளை செய்யும் போது வெள்ளரிக்காய் வைப்பதன் காரணம் இதுதான். கண்கள் சோர்வாகவும், கருவளையத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலும் வெள்ளரிக்காய் அதை நீக்கி விடும்.முகச் சுருக்கம், சுருக்கக் கோடுகள் ஏற்படும் அறிகுறிகள் இருந்தால் உடனே வெள்ளரிக்காயை அரைத்து வாரம் 3 முறை முகத்தில் பூசி வாருங்கள். முகம் இளமையை திரும்பப் பெற்றுவிடும்.
Advertisment
Advertisements
பேசியலை செய்த உடன் வெயிலில் செல்ல கூடாது. முகத்தை சோப் கொண்டு கழுவக்கூடாது. இதை மாலை நேரத்தில் செய்வது சிறந்தது. முகத்தில் அதிகமான கேமிக்கல்களை உபயோகப்படுத்துவது உடலுக்கு கேடு விளைவிக்கும். இது போன்ற இயற்கை பேசியலை செய்தால் ஆரோக்கியத்திற்கும் நல்லது முகமும் பளிச்சிடும்.
வெள்ளரிக்காய் மாஸ்க்:
வெள்ளரிக்காய், புதினா, முட்டையின் வெள்ளைக்கரு இந்த மூன்றையும் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு,அதனை முகத்தில் தடவ வேண்டும். ஆனால் கண்களைச் சுற்றி தடவக்கூடாது. ஏனெனில் இதனால் கண்களுக்கு பாதிப்பு கூட ஏற்படலாம். இப்படி முகத்திற்கு மாஸ்க் போட்ட பின்னர், கண்களின் மேல் வெள்ளரிக்காய் துண்டுகளை வைத்து, 25 நிமிடம் நன்கு உலர வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவிட வேண்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil