தமிழக அரசு சார்பில் வீர தீர செயல் புரிந்த பெண்களுக்கு 2025 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று வழங்கப்படும் கல்பனா சாவ்லா விருதுக்கு இணையதள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
கல்பனா சாவ்லா விருது பெறுவதற்கு, தமிழ்நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட பெண்கள் தானாக முன்வந்து தைரியமாகவும், துணிச்சலுடனும் வீர தீர செயல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும். இவ்விருது பெறுவோருக்கு சுதந்திர தினத்தன்று தமிழக முதலமைச்சரால் தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிப் பதக்கமும், ஐந்து லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படும்.
விருது பெறத் தகுதியுடையோர் தமிழக அரசின் விருதுகள் இணையதளமான https://award.tn.gov.in என்ற முகவரியில் வரும் 16.06.2025 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்ததன் நகலை, மாவட்ட சமூகநல அலுவலகம், அரசு சேவை இல்ல வளாகம், செம்மண்டலம், கடலூர் என்ற முகவரியில் சமர்ப்பிக்குமாறு கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.