பொதுவாகவே மீனவர்களின் நண்பன் என்று அழைக்கப்படும் ஆமைகள் ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை தனது இனப்பெருக்கத்தை பெருக்கும். இதனால் பல்வேறு பகுதியில் இருந்து கடலூரில் இருந்து பிச்சாவரம் கடற்கரை ஓரங்களில் அதிகளவு ஆமைகள் முட்டையிடுவது வழக்கம். தற்போது ஆமைகள் முட்டையிடும் காலங்கள் வந்ததால் இந்த நேரங்களில் ஆமைகள் இப்பகுதியில் முட்டையிட்டு வருகிறது .
நாய் நரி உடும்பு ஆகியவை இந்த ஆமை மூட்டுகளை அழித்து விடுவதால் அதை வனத்துறையினர் பாதுகாத்து ஆமைக்குஞ்சுகள் பொறித்த பின் மீண்டும் அதை கடலில் விடுவது வழக்கமாக உள்ளது.அதன்படி கடலூர் முதல் பிச்சாவரம் வரை கடலூர் மாவட்ட வனத்துறையினர் ஏழு இடங்களில் ஆமை முட்டைகளை பாதுகாக்கும் மையங்களை வைத்து வருகின்றனர்.
/indian-express-tamil/media/post_attachments/c2b23759-554.jpg)
45 முதல் 60 நாட்களுக்கு நாட்களுக்குள் ஆமைக்குஞ்சுகள் முட்டை விட்டு வெளியே வரும் அதை பாதுகாத்து மீண்டும் கடலுக்குள் விடுவது நடந்து வருகிறது. இந்த ஆமை முட்டைகளை பாதுகாப்பதில் கடலூர் வனத்துறையினர் சிறப்பாக செய்து வருகின்றனர். பொதுமக்கள் தன்னார்வல்கள் என பலரும் இதில் ஆர்வம் காட்டுகின்றனர்
மீன்களின் இனப்பெருக்கத்தை ஜெல்லி ஃபிஷ் அழித்து வருகிறது. இந்த ஜெல்லி பிஷ்ஷை ஆமைகள் தான் முக்கிய உணவாக எடுத்துக் கொள்கிறது. இதனால் மீன்களின் உற்பத்தி அதிகரிக்கும். ஒரு ஆமை சராசரியாக 150 கிலோ ஜெல்லி ஃபிஷ் கடலில் உட்கொள்வதால் மீன்களின் இனப்பெருக்கம் எந்தவித தங்கு தடை இன்றி நடைபெற்று வருகிறது. இதனால், மீனவர்களின் நண்பன் என்று ஆமைகள் அன்புடன் அழைக்கப்படுகிறது.
/indian-express-tamil/media/post_attachments/fb181c55-444.jpg)
தற்போது கடலூரில் இருந்து பிச்சாவரம் வரை முட்டை இட்டு வருகிறது. நேற்று திடீரென இதில் ஆர்வம் கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் ஆதித்யன் செந்தில் குமார் வனத்துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் தேவனாம்பட்டினம் முதல் அக்கரை கோரி வரை சென்று ஆமை முட்டைகளை சேகரித்து பாதுகாப்பு மையத்தில் வைத்தனர் .இவர்களுடன் வனத்துறை அதிகாரி குருசாமி தன்னாவலர் செல்லா மற்றும் அதிகாரிகள் உடல் இருந்தனர்.
நேற்று இரவு மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகள் கைப்பற்றி பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டது. முட்டை கிரேடிலிருந்து ஆமைக்குஞ்சுகள் வெளிவந்தவுடன், 60 நாட்களுக்கு பிறகு மீண்டும் ஆமைக்குஞ்சுகளை கடல் கடலில் விடப்படும். கடலில் விடப்படும் ஆமைக்குஞ்சுகள் மீண்டும் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இதே இடத்தில் வந்து தனது இனப்பெருக்கத்தை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது
செய்தி: பாபு ராஜேந்திரன்.