கடலூர் மாவட்டத்தில், தென்னிந்திய அளவிலான முதலாம் ஆண்டு சேவல் கலை சமர் திறன் போட்டி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தொடங்கி வைத்து உரையாற்றினார். இதில், கால்நடை பராமரிப்பு துறையின் சார்பாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து சேவல்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த பரிசோதனை, கடலூர் மண்டல இணை இயக்குனர் மருத்துவர் ஆர். பொன்னம்பலம் தலைமையில் நடைபெற்றது. இதற்கு கடலூர் உதவி இயக்குனர் மருத்துவர் ச. வேங்கடலட்சுமி முன்னிலை வகித்தார். மருத்துவர்கள் ஸ்டாலின் வேதமாணிக்கம், சுந்தரம், நரேந்திரன், மதன்குமார், மணிகண்டன், நடமாடும் கால்நடை ஊர்தி மருத்துவர் ஜமுனா, கால்நடை ஆய்வாளர்கள் திலீபன், ராஜ்கமல் உள்ளிட்ட பலர் இதில் பரிசோதனை மேற்கொண்டனர்.
இதில், 500-க்கும் மேற்பட்ட சேவல்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இது தவிர வெற்றி பெற்ற பயனாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.
செய்தி - செய்தி: பாபு ராஜேந்திரன்