திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வார விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் கூடுதலாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் தேனி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திருப்பதி செல்லும் பக்தர்களின் வசதிக்காக, அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் கம்பத்தில் இருந்து திருப்பதிக்கு அரசு பேருந்து சேவை இயங்கி வருகிறது.
கம்பத்திலிருந்து மாலை 6 மணிக்கு புறப்படும் இந்தப் பேருந்து, திண்டுக்கல், சேலம், கிருஷ்ணகிரி, வேலூா் வழியாக மறுநாள் காலை 8 மணிக்கு திருப்பதி சென்றடையும். அதேபோல், திருப்பதியிலிருந்து கம்பத்துக்கு மாலை 6 மணிக்கு இயக்கப்படுகிறது. பேருந்து கட்டணம் நபா் ஒன்றுக்கு ரூ 710 ஆகும். பேருந்தில் மொத்தம் 40 இருக்கைகள் உள்ளது
சிறுவர்களுக்கு 350 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
நீங்கள் தேனி சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள் என்றால், அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் இந்த பேருந்து சேவையை பயன்படுத்தி திருப்பதிக்கு பயணிக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“