/indian-express-tamil/media/media_files/2025/09/27/face-pack-2025-09-27-16-06-18.jpg)
2 டீஸ்பூன் தயிருடன் கொஞ்சமா கற்றாழை... மங்கல் முகத்தை பொலிவாக்க இப்படி செய்யுங்க!
நம் எல்லோருக்கும் முகத்தை பளபளவென்று வைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஒரு நபர் நம்மை பார்க்கும் பொழுது முகம் எவ்வளவு பொழிவாக இருக்கிறது. முகத்திற்கு என்ன செய்கிறீர்கள்? என்று கேட்ட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.
ஆனால், நம் முகம் வெயில், தூசு ஆகியவற்றால் பொலிவிழந்து போகின்றது. அதிலும் நாம் வெயிலில் சுற்றும் பொழுது சூரிய கதிர் வீச்சினால் சருமத்தில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது. UVA & UVB போன்ற கதிர் வீச்சுகளால் சருமத்தை பாதுகாக்கும் மெலனின் என்ற நிறமி சுரக்கிறது.
இந்த நிறமி அதிக அளவு சுரப்பதால் சருமத்தில் கருமை நிறம் ஏற்படுகிறது. இந்த கருமை நிறம் சிலருக்கு நெற்றி, வாய்களை சுற்றி இருக்கும். இந்தப் பிரச்னையில் இருந்து விடுபட நம் வீட்டில் இருக்கும் பொருட்களை எப்படி உபயோகமாக பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.
ஒரு கிண்ணத்தில் இரண்டு டீஸ்பூன் தயிரை எட்டுத்து கொள்ள வேண்டும். அதில், கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பின்னர் அந்த கலவையை பேஸ் பேக்காக முகத்தில் அப்ளை செய்து கொள்ளவும். இந்த பேஸ் பேக்கை சர்குலர் வடிவில் அப்ளை பண்ண வேண்டும்.
இப்போது அதை 15 நிமிடத்தில் அப்படியே காய விடவேண்டும். தயிரில் இருக்கும் லாக்டிக் அமிலம் நம் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றும். அதேபோல் கற்றாழை நம் சருமத்தை குளிர்ச்சியாக, ஹைட்ரேட்டடாக வைத்துக்கொள்ளும். அதுமட்டுமில்லாமல் கருமை நிறத்தையும் நீக்கும்.
இந்த பேஸ்பேக் காய்ந்த உடன் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். அப்படி கழுவும் பொழுது முகத்தை அழுத்தி தேய்த்து கழுவ கூடாது. அதுவே முகத்தை கருமையாக்க ஒரு சான்ஸாக மாறலாம். அடுத்ததாக ஒரு சிறு துண்டு தக்காளியை நன்கு பிசைந்து கூழாக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதில் ஒரு டீஸ்பூன் தேனை விட்டு நன்கு கலக்க வேண்டும். தக்காளியில் உள்ள லைகோபின் சருமத்தில் சுரக்கின்ற மெலனின் சுரப்பிய கட்டுப்படுத்தும். அதேபோல் தேன் நம் சருமத்த ஹைட்ரேட்டாக வைத்துக் கொள்ளும்.
இப்போது இந்த பேஸ் பேக்கை முகத்தில் தடவி பத்து நிமிடங்களுக்கு பின் காய்ந்த உடன் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த பேஸ்பேக்கை வாரத்தில் மூன்று முறை பயன்படுத்தலாம். இதைத்தவிர, ஐஸ்கட்டிகளை ஒரு காட்டன் துணியில் வைத்து அதனை முகத்தில் மெதுவாக அழுத்தி எடுக்கும்போது கருமை படிப்படியாக குறையும், அதேபோல் முகத்தில் உள்ள சிறு துளைகளும் அடைக்கப்படும்.
அதுமட்டுமல்லாமல், காலையில் எழுந்த உடன் ஒரு பவுளில் குளிர்ந்த நீரை எடுத்துக் கொண்டு முகத்தை நன்றாக மூழ்கி எடுப்பதன் மூலம் முகம் பிரஸ்ஸாக மாறும். பொதுவாக முகத்திற்கு வெளியே நாம் போடும் பேஸ் பேக்குகளை தாண்டி நம் உடலையும் குளிர்ச்சியாக வைத்து கொள்ள வேண்டும்.
சத்தான பழங்கள், காய்கறிகளை சாப்பிட வேண்டும். நெல்லிக்காய், தர்பூசணி, இளநீர், நுங்கு போன்ற பழங்கள் நம் உடம்பிற்கு குளிர்ச்சியை தருகிறது. இதனை அந்தந்த காலங்களுக்கு ஏற்ப எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதேபோன்று கீரை வகைகளையும் நம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு ஏதாவது கீரை, காய்கறி என்று நம் உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் நம் உடல் உள்ளிருந்து சுத்தமாக்கப்படுகிறது. தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us