Curd Chutney Recipe In Tamil, Curd Chutney Tamil Video: இட்லி அல்லது தோசை தினமும் சாப்பிட்டுவிடலாம். அதற்கு சைடிஷ் வைப்பதுதான் பலருக்கு பிரச்னை! எத்தனை நாள் தேங்காய் சட்னி, காரச் சட்னி என ஒரே வட்டத்திற்குள் ஓடிக் கொண்டிருப்பது?
Advertisment
உங்கள் கவலையை இந்த உடனடி சட்னி போக்கும். இதற்கு தயிர் இருந்தால் போதும்; சிம்பிளாக உடனடி சட்னி வைத்துவிடலாம். இந்த அவசர சட்னி எப்படி வைப்பது என இங்கே காண்போம்.
Curd Chutney Tamil Video: உடனடி சட்னி
Advertisment
Advertisements
உடனடி சட்னி வைக்கத் தேவையான பொருட்கள் : தயிர் - 1/2 கப், பெரிய வெங்காயம் - 1, கடுகு - 1 டீ ஸ்பூன், எண்ணெய் - 1 டீ ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, மிளகாய் தூள் - 1 டீ ஸ்பூன், தனியா தூள் - 2 டீ ஸ்பூன், இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீ ஸ்பூன், கரம் மசாலா தூள் - 1/2 டீ ஸ்பூன்
உடனடி சட்னி செய்முறை :
உடனடி சட்னி செய்முறை வருமாறு: கெட்டியாக தயிர் வைத்துக் கொள்ளவும். அதை கட்டிகள் இல்லாமல் அடித்து வைத்துக் கொள்ளலாம். பிறகு அதில் மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்துக் கலந்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு போட்டு தாளியுங்கள். அதனுடன் இஞ்சி- பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். அடுத்ததாக வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். பிறகு கரைத்து வைத்துள்ள தயிரை ஊற்றி கிளறுங்கள். கால் டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். பிறகு மூடி வைத்து 10 நிமிடங்களுக்குக் கொதிக்க விடுங்கள். சில நிமிடங்கள் கழித்து கிளறிவிட்டால் தண்ணீர் இறுகி கெட்டியாக வரும். பின் கொத்தமல்லி இலை தூவி இறக்குங்கள். இப்போது சட்னி தயார்.
குறைவான நேரத்தில் குறைந்த பொருட்களைக் கொண்டு செய்யப்படும் இந்த சட்னி, அலுவலகம் செல்கிறவர்களுக்கு உபயோகமாக இருக்கும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"