கோடையில் தயிர் சாப்பிட விரும்பாதவர்கள் யாரும் இல்லை.
தயிர் உடலை ஹைட்ரேட் செய்ய உதவுகிறது, நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது, வலுவான எலும்புகளை உருவாக்குகிறது, சருமத்தை மேம்படுத்த உதவுகிறது, மேலும் உங்கள் உடல் எடையை பராமரிக்க உதவுகிறது.
பெரும்பாலும், மக்கள் கடைகளில் இருந்து தயிர் வாங்குகிறார்கள், ஆனால் வீட்டில் நீங்களே செய்யும் தயிருக்கு சுவை அதிகம். வீட்டில் தயாரிக்கப்பட்ட தயிர் அதிக கிரீம் மற்றும் பிரெஷாக இருக்கும்.
நீங்களே வீட்டில் சொந்தமாக ஹங் கர்ட் (hung curd) எப்படி செய்யலாம் என்பது இங்கே
Hung Curd என்றால் என்ன?
Hung Curd அடிப்படையில் இந்திய தயிர், அதில் இருந்து அனைத்து மோர் (whey) நீக்கப்பட்டது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இது கிரீக் யோகர்ட் போன்றது, இது வடிகட்டிய தயிர் (strained curd) என்றும் அழைக்கப்படுகிறது.
ஹங் கர்ட் ஒரு தனித்துவமான சுவை கொண்டது மற்றும் பானங்கள், இனிப்புகள் மற்றும் ரைதா போன்ற பல்வேறு உணவுகளை தயாரிக்க பயன்படுத்தலாம்.
எவ்வளவு நேரம் ஆகும்?
ஹங் கர்ட் தயாரிக்க பொதுவாக நான்கு மணி நேரம் ஆகும்.
ஹங் கர்ட் தயாரிக்கும் போது, துணி தேர்வு முக்கியமானது. காட்டன் பதிலாக மஸ்லின் துணியைப் பயன்படுத்தினால், இது மென்மையான மற்றும் கிரீமியர் அமைப்பைக் கொடுக்கும்.
நீங்கள் ஸ்டீல் பாத்திரங்களைப் பயன்படுத்தலாம் என்றாலும், தயிரை மெதுவாகக் கையாள்வது முக்கியம். பனீர் போல் மஸ்லின் துணியில் தயிரை பிழிந்து கொள்ளவும், ஆனால் தயிர் மிகவும் மென்மையானது என்பதை நினைவில் கொள்ளுங்கள், எனவே அதை கவனமாக கையாளவும்.
முடிந்தவரை தண்ணீரை அகற்ற 30-40 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். துணியை எங்காவது தொங்கவிடலாம். அதன் பிறகு, 4-5 மணி நேரம் குளிரூட்டவும்.
ஹங் கர்ட் தயார்.
கெட்டியான தயிர்க்கு, பால் வெப்பநிலை சற்று அதிகமாக இருப்பதை உறுதி செய்யவும். அரை லிட்டர் பாலில் இருந்து தயிர் செட் ஆக , சுமார் இரண்டு டேபிள்ஸ்பூன் தயிர் சேர்க்கவும்.
இந்த வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், நீங்கள் சுவையான ஹங் கர்ட் தயாரிக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“