சுவையான தயிர் இட்லி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
இட்லி மாவு - 2 கப்
புளிக்காத புது தயிர் - 3 டீஸ்பூன்
ஓமப்பொடி - 3 டீஸ்பூன்
மிளகாய்தூள் - அரை டீஸ்பூன்
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மல்லித்தழை - சிறிதளவு
அரைக்க
தேங்காய் துருவல் - 3 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
முந்திரிப்பருப்பு -6
செய்முறை
முதலில் அடுப்பில் இட்லி பாத்திரம் வைத்து எப்போது போல் இட்லி ஊற்றி வேக வைத்து எடுக்கவும். சிறு சிறு இட்லிகளாக ஊற்றி வேக வைத்துக் கொள்ளவும். அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக அரைத்து தயிருடன் கலந்து கொள்ளுங்கள்.
அத்துடன் கடுகு, பெருங்காயம் தாளித்து உப்பு சேர்த்து, நன்கு கலந்து கொள்ளுங்கள். இப்போது ஒரு கிண்ணம் எடுத்து அதில் இட்லி வைத்து இப்போது நாம் தயாரித்து வைத்துள்ள தயிரை அதன்மேல் ஊற்றி மல்லித்தழை, ஓமப்பொடி, மிளகாய்தூள், சீரகத்தூள் தூவி பரிமாறினால் சுவையான தயிர் இட்லி ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“