ஒரு முறை தயிர் இட்லி, இப்படி செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
இட்லி மாவு 2 கப்
அரை ஸ்பூன் மஞ்சள் பொடி
ஈனோ ப்ரூட் சால்ட் அரை ஸ்பூன்
எண்ணெய் 2 ஸ்பூன்
2 ஸ்பூன் நெய்
1 ஸ்பூன் கடுகு
1 ஸ்பூன் இஞ்சி நறுக்கியது
2 ஸ்பூன் பூண்டு நறுக்கியது
2 பச்சை மிளகாய்
1 கொத்து கருவேப்பிலை
2 கப் தயிர்
¼ ஸ்பூன் சீரகப் பொடி
½ ஸ்பூன் உப்பு
2 சிட்டிகை மிளகாய் பொடி
செய்முறை : இட்லி மாவு, மஞ்சள் பொடி, ஈனோ ப்ரூட் சால்ட் சேர்த்து கிளரவும். இதை இட்லி பாத்திரத்தில் வேக வைத்து எடுக்கவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து கடுகு, பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து தாளித்து வைத்துகொள்ளவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் தயிர், சீரகப் பொடி, உப்பு, மிளகாய் பொடி சேர்த்து கிளரவும். இதில் தாளிப்பை கொட்டவும். தற்போது இதை ப்ரிஜில் வைக்கவும். தொடர்ந்து இட்லி மீது, இதை ஊற்றி சாப்பிடவும்.