Curd rice tamil video, curd rice benefits: தயிர் சாதம் என்றாலே இளப்பமா பார்க்காதீங்க! எதையுமே நாம செய்யுற பக்குவத்திலும், அதற்காக எடுக்குற அக்கறையிலும்தான் இருக்கு! அந்த வகையில் தயிர் சாதத்தை இப்படிச் செய்து லஞ்ச் பாக்ஸில் வைத்துக் கொடுத்தால் உங்கள் குழந்தைகளோ, இணையரோ ரொம்ப சந்தோஷப் படுவாங்க!
Advertisment
நறுக்கிய முந்திரி சேர்க்க இருப்பதால், இதை ஸ்பெஷல் தயிர் சாதம் என அழைப்போம். முந்திரி இருந்தால் குழந்தைகளுக்கு பிடிக்காதா என்ன? ஓ.கே! எப்படி செய்வது என பார்க்கலாம்.
curd rice benefits: தயிர் சாதம்
ஸ்பெஷல் தயிர் சாதம் தேவையான பொருட்கள் :பச்சரிசி - 1 கப், பால் - அரை கப், புளிக்காத புதிய தயிர் - ஒன்றை கப்,
Advertisment
Advertisements
இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்தரைத்த விழுது - 1 டீஸ்பூன்,
கடுகு - அரை டீஸ்பூன், மிளகாய் வற்றல் - 3, பொடியாக நறுக்கிய முந்திரி - 4 டேபிள் ஸ்பூன், திராட்சை - 20, எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவைக்கு.
curd rice: ஸ்பெஷல் தயிர் சாதம் செய்முறை :
முதலில் கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். சாதத்தை குழைவாக வேக வைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சூடான சாதத்தை போட்டு அதனுடன் உப்பு, வெண்ணெய், பெருங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் விழுது, பால் மற்றும் கருவேப்பிலை, கொத்தமல்லித்தழை ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடனாதும் கடுகு, மிளகாய், முந்திரி, திராட்சை (திராட்சை சிவக்கக் கூடாது) ஆகியவற்றை போட்டு தாளித்து கலந்து வைத்துள்ள சாதத்தில் தாளிதக் கலவை, சேர்த்து நன்றாக கலக்குங்கள். இப்போது அருமையான ஸ்பெஷல் தயிர் சாதம் ரெடி.
தயிர் சாதம் உடல் உஷ்ணம், செரிமானப் பிரச்னை உள்ளிட்டவற்றுக்கு சிறந்த மருந்து என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். தவிர, சுலபமாக செய்யக்கூடிய சத்தான உணவு இது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"