உடலுக்கு ஆரோக்கியம் தருவதில் கறிவேப்பிலை முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், இதனை உணவில் இருந்து பலரும் ஒதுக்கி வைத்து விடுகிறோம். பார்ப்பதற்கு மிகச் சிறியதாக இருந்தாலும், இதில் உள்ள நன்மைகள் ஏராளம்.
கறிவேப்பிலையில் இரும்புச் சத்து அதிகமாக உள்ளது. இதனை தினசரி எடுத்துக் கொள்வதால் இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் அதிகரிக்கிறது. மேலும், சர்க்கரை நோய் மற்றும் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க கறிவேப்பிலை பெரிதும் உதவி செய்கிறது.
இத்தகைய மருத்துவ குணம் வாய்ந்த கறிவேப்பிலை கொண்டு ஜூஸ் செய்வது எப்படி எனப் பார்க்கலாம். இரண்டு கைப்பிடி அளவிற்கு கறிவேப்பிலையை கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும், எலுமிச்சை சாறு இத்துடன் கலந்து, ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டும்.
இந்த ஜூஸை தினசரி குடித்தால் முடி உதிர்வு உள்ளிட்ட பல பிரச்சனைகள் கட்டுப்படுத்தப்படும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“