கறிவேப்பிலை குழம்பு, ஒரு இப்படி செய்து பாருங்க. செம்ம சூப்பரா இருக்கும்.
தேவையான பொருட்கள்
எண்ணெய்
மல்லி 2 டெபிள் ஸ்பூன்
அரை டீஸ்பூன் வெந்தயம்
அரை ஸ்பூன் மிளகு
6 வத்தல் மிள்காய்
2 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காய்
1 கொத்து கருவேப்பிலை
1 தக்களி நறுக்கியது
உப்பு தேவையான அளவு
புளி சின்ன எலுமிச்சை அளவு
2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணை
கால் டீஸ்பூன் கடுகு
கால் டீஸ்பூன் மிளகு
கால் டீஸ்பூன் சோம்பு
கால் டீஸ்பூன் சீரகம்
பூண்டு கால் கப்
7 சின்ன வெங்காயம்
கால் ஸ்பூன் மஞ்சள் தூள்
செய்முறை : ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து மல்லி, வெந்தயம், மிளகு, வத்தல், தேங்காய் துருவல், தக்காளி, உப்பு சேர்த்து வதக்க வேண்டும். நன்றாக நிறம் மாறும் வரை வதக்கவும். ஆறியதும் புளி சேர்த்து அரைத்துகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணை, கடுகு, மிளகு, சோம்பு, சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கி வர வேண்டும். தொடர்ந்து அரைத்த விழுதை சேர்த்து, தண்ணீர் சேர்த்து கொள்ளவும். மஞ்சள் பொடி சேர்த்துகொள்ளவும். நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். எண்ணெய் பிரிந்து வர வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“