அதிக சத்துகள் கொண்ட கறிவேப்பிலை பொடியை இப்படி செய்து பாருங்க. சுவை சூப்பராக இருக்கும்.
கறிவேப்பிலை - 2 கப்
மிளகு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
புளி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி விதை - 1 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து அதை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் விட்டு காயவைக்கவும். பின்னர் அதில் மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, உப்பு, புளி, கொத்தமல்லி விதை ஆகிவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவும். அடுப்பை அணைத்து, அதிலிருக்கும் சூட்டிலேயே கறிவேப்பிலையை சேர்த்து லேசாகப் பிரட்டி எடுக்கவும்.
இவையனைத்தையும் மிக்ஸியில் இட்டு, அத்துடன் பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக பொடியாக அல்லது நொறுநொறுப்பாக அரைத்துக்கொள்ளவும்.இப்போது சூப்பரான மற்றும் இட்லி, தோசைகளுக்கு ஏற்ற கறிவேப்பிலை பொடி தயாராக இருக்கும். அவற்றை காற்று புகாத கண்ணாடி டப்பாவில் சேர்த்து வைத்து 1 மாதம் வரை பயன்படுத்திக் கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil