ஆரோக்கியம், சுவையான கறிவேப்பிலை குழம்பு ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம். சுடு சோற்றுடன் வைத்து சாப்பிட சுவையான இருக்கும்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் - 2 ஸ்பூன்
கறிவேப்பிலை- 1 கப்
நல்லெண்ணைய்- 5 ஸ்பூன்
சுண்ட வத்தல்? 5
காய்ந்த மிளகாய்- 2
கடுகு- 1 டீஸ்பூன்
பூண்டு- 5
சீரகம்- 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள்- சிறிதளவு
தேங்காய்-2 டேபிள் ஸ்பூன்
குழம்பு தூள்- 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள்- 2 டேபிள் ஸ்பூன்
தக்காளி- 3
புளி- சிறிய எலும்பிச்சை அளவு
உப்பு- தேவையான அளவு
செய்முறை
முதலில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ப்ரெஸான கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். ஈரம் இல்லாமல் இருக்க வேண்டும். மொறு மொறு என்று வரும் வரை வதக்கவும். இதை தனியாக எடுத்து வைக்கவும்.
அடுத்து அதே கடாய்யில் நல்லெண்ணைய் 5 ஸ்பூன் அளவிற்கு ஊற்றவும். இந்த குழம்பிற்கு எண்ணெய் அதிகமாக தேவைப்படும். சுண்ட வத்தல் சேர்த்து நன்றாக வறுக்கவும். இல்லை என்றால் கசப்பாக இருக்கும். இதை வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.
இப்போது மிக்ஸி ஜார் எடுத்து அதில் வறுத்த கறிவேப்பிலை, வத்தல், 2 டேபிள் ஸ்பூன் தேங்காய். சிறிதளவு சேர்தால் போதும். நைசாக அரைக்கவும். இப்போது அதே எண்ணெய்யில் கடகு, மிளகாய், சீரகம், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு சேர்க்கவும்.
பொடியாக தான் நறுக்க வேண்டும். பெருங்காயத் தூள் சிறிதளவு சேர்க்கவும். நன்கு வதக்கவும். மிதமான தீயில் வைக்கவும். 2 டேபிள் ஸ்பூன் குழம்பு தூள், மிளகாய் தூள் சேர்க்கவும்.
3 தக்காளி மிக்ஸியில் அடித்து சேர்க்கவும். கொஞ்சம் காரம் அதிகமாக இருந்தால் தான் இந்த குழம்பு நன்றாக இருக்கும்.
அடுத்து சிறிதளவு அளவு சுடு தண்ணீர் சேர்க்கவும். அரைத்த கறிவேப்பிலையை இதில் சேர்க்கவும். புளி தண்ணீர் சேர்க்க வேண்டும். அதனால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்தால் போதும். இப்போது புளி தண்ணீர் சேர்க்கவும். சிறிய எலும்பிச்சை அளவு புளி தண்ணீர் சேர்த்தால் போதும். உப்பு சேர்த்து சுவை பார்க்கவும். இப்போது மீண்டும் கொஞ்சம் தண்ணீர் சேர்க்கவும். அவ்வளவு தான் மூடி வைத்து வேக விடவும். நன்கு சுண்ட வைக்க வேண்டும். எண்ணெய் மிதக்கும் அளவிற்கு சுண்ட வைத்து எடுக்கவும். இது நன்கு பசி எடுக்கும். சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“