ஒருமுறை கருவேப்பிலை துவயல் , இப்படி செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
1 டெபிள் ஸ்பூன் நல்லெண்ணை
1 டீஸ்பூன் அளவு உளுந்தம் பருப்பு
1 டீஸ்பூன் மிளகு, சீரகம்
3 வத்தல்
1 கப் கருவேப்பிலை
தேங்காய் சில துண்டுகள்
புளி குறைந்த அளவு
செய்முறை : ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து, அதில் கடுகு, சீரகம், மிளகு சேர்க்கவும். கடுகு, சீரகம், மிளகு எல்லாம் ஒரே அளவில் இருக்க வேண்டும். இதை தொடர்ந்து வதக்க வேண்டும். இதில் கருவேப்பிலை, தேங்காய் துண்டுகளை சேர்த்து வதக்கவும். தொடர்ந்து புளி, உப்பு சேர்த்து அரைத்துகொள்ளவும்.