Advertisment

விட்டமின் சி நிறைய இருக்கு... தினமும் ஒரு சீதாப் பழம்... சுகர் பேஷன்ட்ஸ் நோட் ப்ளீஸ்!

சீதாப் பழத்தில் கிளைசிமிக்ஸ இன்டெக்ஸ் 50க்கும் குறைவாக உள்ளது. லோ-கிளைசிமிக்ஸ இன்டெக்ஸ் அளவில் உள்ளது.

author-image
WebDesk
New Update
custard apple

இப்போது சீதாப் பழம் சீசன் தொடங்கி விட்டது. பலரும் விரும்பி சாப்பிடுவர். சுகர் உள்ளவர்கள் இதை சாப்பிடலாமா? கூடாதா? என சந்தேகம் இருக்கும்  இதற்கு மருத்துவர் சிவப் பிரகாஷ் விளக்கம் அளித்துள்ளார். சீதாப் பழத்தில் நிறைய சத்துகள் இருக்கு. குறிப்பாக விட்டமின் சி நிறைய உள்ளது.

Advertisment

குறிப்பாக விட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகம் வழங்கும். அதோடு இதில் மெக்னீசியம் அதிகம் உள்ளது. இது எலும்புகள், மூட்டுகளுக்கும் வலு சேர்க்கும். எலும்பு தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள் சீதாப் பழம் சாப்பிடுவது நல்ல பயன் தரும். பொதுவாகவே பழங்கள் சாப்பிடுவது உடலில் ஆன்டிஆக்ஸிடென்ட் அதிகரிக்கும். 

ஆன்டிஆக்ஸிடென்ட் அழுத்தத்தை குறைக்கும், உடலில் கழிவுகளை சரி செய்யும் தவிர்க்கும். சீதாப் பழத்தில் கேலரிஸ் 90-100 அளவு உள்ளது. சுகர் உள்ளவர்களுக்கு இது சற்று அதிகம் தான். கிளைசிமிக்ஸ இன்டெக்ஸ் என்பது சர்க்கரையை உயர்த்தும் திறன் கொண்டது. ஆனால் சீதாப் பழத்தில் கிளைசிமிக்ஸ இன்டெக்ஸ் 50க்கும் குறைவாக உள்ளது. லோ-கிளைசிமிக்ஸ இன்டெக்ஸ் அளவில் உள்ளது. 

அதனால் சுகர் உள்ளவர்கள் இதை சாப்பிடுவதால் சர்க்கரை அதிகம் ஆகாது. அதிகம் ஆவதற்கான வாய்ப்புகள் குறைவு. அதனால் அளவாக இந்தப் பழத்தை எடுத்துக் கொள்ளலாம் என மருத்துவர் கூறினார்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment