சுவையான கறிவேப்பிலை முட்டை மசாலா ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
முட்டை – 8
கறிவேப்பிலை – 1 கைப்பிடி அளவு
மிளகு – 2 டீஸ்பூன்
சீரகம் – 2 டீஸ்பூன்
சோம்பு – 2 டீஸ்பூன்
இஞ்சு – 2 சிறிய துண்டு
பூண்டு – 10 பற்கள்
சின்ன வெங்காயம் – 14
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய்தூள் – 2 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை
முதலில் எப்போதும் போல் முட்டை வேக வைத்து எடுக்கவும். உப்பு போட்டு வேக வைத்து எடுக்கவும். பின்னர் வேக வைத்த முட்டைகளை தோல் உரித்து இரண்டு பாதியாக நறுக்கி கொள்ளவும். இப்போது மிக்சி ஜாரில் மிளகு, சீரகம், சோம்பு, இஞ்சி, பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்து மிக்சியில் இருக்கும் பொருட்களுடன் 2 டீஸ்பூன் மிளகாய்தூள், 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள், ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பில்லை, தேவையான அளவு உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு மசாலா பதத்திற்கு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இப்போது நறுக்கி வைத்துள்ள முட்டையின் மீது நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை தடவிக் கொள்ளுங்கள். பிறகு அடுப்பில் ஒரு கடாய் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நாம் மசாலா தடவி வைத்துள்ள முட்டையை அதனுடன் சேர்த்து முன்னும் பின்னும் பிரட்டி போட்டு நன்கு வேகவைத்து எடுத்தால் ருசியான கறிவேப்பிலை முட்டை மசாலா ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“