மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் வரலாறு காணாத கனமழை பெய்துள்ளது. இடைவிடாது கொட்டிய இந்த கனமழையால் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கி குளம்போல காட்சியளிக்கிறது.
இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமலும், உணவு, குடிநீர் கிடைக்காமலும் தவித்து வருகின்றனர். மீட்பு பணிகள் நடைபெற்று வந்தாலும், புறநகரிலுள்ள பல்வேறு பகுதிகளில் இன்னும், அரசின் உதவி சென்றடையவில்லை.
வெள்ளம் முழுமையாக வடியாததால் பல பகுதிகளுக்கு இன்னும் மின்சாரம் வழங்கப்படவில்லை.
சென்னையின் பல இடங்களில் தொலைத் தொடர்பு சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தன்னார்வலர்களும், பல்வேறு தொண்டு நிறுவனங்களைச் சார்ந்தவர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகின்றனர்.
அந்தவகையில் நடிகை அறந்தாங்கி நிஷாவும் தன்னார்வலர்களுடன் சேர்ந்து புயலால் பாதித்த மக்களுக்கு வாட்டர் பாட்டில், உணவு, பிற அத்தியாவசிய பொருட்கள் போன்ற பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறார்.
அப்போது எடுத்த வீடியோக்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறந்தாங்கி நிஷா பகிர்ந்துள்ளார்.
வீடியோ பார்க்க கிளிக் பண்ணுங்க
’நேத்துல இருந்து டாடா ஏஸ் வண்டிக்காக நிறைய பேருக்கு கால் பண்ணோம். சென்னை சொன்ன உடனேயே யாருமே கொடுக்கல. நைட்ல இருந்து வண்டி எதுவுமே கிடைக்கல. அதனால எங்க கார்ல, இருக்கிற பொருட்களை ஏத்திட்டோம்.
இன்னைக்கு காலையில 7 மணிக்குத் தான் திருச்சியில இருந்து கிளம்ப முடிஞ்சது.
யாராவது சென்னைக்கு உதவி கேட்டா தயவு செய்ஞ்சு கொடுங்க. வெள்ளத்துல அப்படியே வண்டி போயிராது. எங்க கார்ல தான் நாங்க போயிட்டு திரும்பி வரப் போறோம். அதை நான் உங்களுக்கு காட்டுறேன்’ என்று மன வருத்தத்துடன் பேசினார் நிஷா…
குறிப்பு: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் பணியில் தனிநபர், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள தமிழ்நாடு அரசு வாட்ஸ்அப் எண்கள் அறிவித்துள்ளது.
கீழே சன் நியூஸ் ட்வீட் பாருங்க
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“