இது புதிய ‘பிசினஸ்’: தாய்ப்பாலை ஆண்களுக்கு விற்று லட்சத்தில் சம்பாதிக்கும் பெண்

சைப்ரஸ் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் தாய்ப்பாலை ஆண்களுக்கு, குறிப்பாக பாடி பில்டர்களுக்கு விற்று பணம் சம்பாதித்து வருகிறார்.

சைப்ரஸ் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் தாய்ப்பாலை ஆண்களுக்கு, குறிப்பாக பாடி பில்டர்களுக்கு விற்று பணம் சம்பாதித்து வருகிறார்.

ரஃபேலா லாம்ப்ரூ (24), தன் இரண்டாவது குழந்தையை சமீபத்தில் பெற்றெடுத்தார். இந்நிலையில், குழந்தைக்கு கொடுத்ததுபோக மீதம் உள்ள தாய்ப்பாலை, அக்கம்பக்கத்தில் உள்ள பிறந்த குழந்தைகளுக்கு கொடுத்து வந்தார். இப்போது, என்ன செய்கிரார் தெரியுமா? உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க நினைக்கும் ஆண்களுக்கும், குறிப்பாக பாடி பில்டர்களுக்கும் பெரும் தொகைக்கு தாய்ப்பாலை விற்று வருகிறார்.

“தாய்ப்பால் மூலம் தசை வலிமையடையும் எனக்கூறி பல பாடி பில்டர்கள் என்னிடம் வந்து தாய்ப்பாலை வாங்கி செல்கின்றனர்.”, என்கின்றார் ரஃபேலா.

தாய்ப்பால் குடிப்பதால் தசை வலிமையடையும் என்பதற்கு எந்தவொரு அறிவியல் ஆதாரமும் இல்லையெனினும், அதனை சிலர் நம்பத்தான் செய்கின்றனர்.

தாய்ப்பாலுக்கு ஆன்லைன் வணிகத்தில் செம்ம டிமாண்ட் இருப்பதையறிந்த ரஃபேலா, ஒரு அவுன்ஸ் தாய்ப்பாலை ரூ.80க்கு விற்பனை செய்கிறார். இதுவரை ரஃபேலா, மொத்தம் சுமார் 500 லிட்ட தாய்ப்பாலை விற்று 4 லட்ச ரூபாய் வருமானம் ஈட்டியிருக்கிறார்.

இதற்காக ஃபேஸ்புக் பக்கத்தை ஆரம்பித்து அதன்மூலம் வாடிக்கையாளர்களை ஈர்க்கிறார்.

தாய்ப்பாலை விற்பதற்கு ரஃபேலின் கணவர் எந்தவொரு மறுப்பும் தெரிவிக்கவில்லை. இந்த வியாபாரத்தை எவ்வளவு நாட்கள் கொண்டுபோக முடியும் என்பது தனக்கு தெரியாது எனக்கூறும் ரஃபேல், இந்த வியாபாரத்தில் தான் அடிமையாக இருப்பதாக தெரிவிக்கிறார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close