இந்த டிஷ் செய்ய வெறும் 15 நிமிஷம்தான் ஆகும். செஃப் பட் சொல்வது போல் செய்தால் ருசி ருசி சூப்பரா இருக்கும்.
தேவையான பொருட்கள்
2 வெங்காயம்
3 ஸ்பூன் எண்ணெய்
2 பட்டை
7 கிராம்பு
3 பிரிஞ்சி இலை
5 ஏலக்காய்
அரை ஸ்பூன் சீரகம்
உப்பு
3 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
அரை ஸ்பூன் மஞ்சள் தூள்
2 ஸ்பூன் மல்லித் தூள்
1 ஸ்பூன் மிளகாய் பொடி
அரை ஸ்பூன் கரம் மசாலா
1 டம்ளர் தண்ணீர்
4 தக்காளி அரைத்தது
2 டீஸ்பூன் சர்க்கரை
செய்முறை: ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து அதில் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, ஏலக்காய், சீரகம் சேர்த்து கிளரவும். தொடர்ந்து வெங்காயம் சேர்த்து உப்பு சேர்த்து கிளரவும். தொடர்ந்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சமைக்க வேண்டும். தொடர்ந்து இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து கிளரவும். தொடர்ந்து தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். தொடர்ந்து தக்காளி அரைத்தது சேர்த்து கிளரவும். தொடர்ந்து 2 டீஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும். 5 நிமிடங்கள் கொதிக்க வேண்டும். தொடர்ந்து இதில் வெட்டிய பன்னீரை சேர்க்கவும். அடுப்பை அணைத்தவுடன் 1 ஸ்பூன் தயிர் சேர்த்து கிளரவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“