Dad’s Gift for Valentine’s Day for Daughters : தாய் மகன் உறவில் எவ்வளவு அன்பு நிறைந்திருக்கிறதோ அதேபோல் தான் தந்தை – மகள் உறவும். அப்பாவுக்கு மகளுக்கும் இடையே இருக்கும் அன்பின் அளவை உணர்த்துவது எளிதான விஷயமல்ல.
காதலர் தினம் என்றாலே இளம் காதல் ஜோடிகளுக்கு என்ற எண்ணம் தான் அதிகமாக பரவியிருக்கிறது. ஆனால் அன்பின் வெளிபாடு தான் காதலர் தினம் என்பதே உன்மை. இந்த தினத்தில் ஒருவர் மீது ஒருவர் அன்பு கொண்ட யாராக இருந்தாலும் கொண்டாடலாம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் இணைந்தும் கொண்டாடும் சிறப்பான நாள் தான் வேலண்டைன்ஸ் டே.
Valentine’s Day for Daughters
இந்த காதலர் தினத்தில் அப்பாக்கள் அனைவரும் தங்களின் மகளுக்கு பெஸ்ட் பரிசுகள் மூலம் ஆசரியப்படுத்தலாம்.
1. ஸ்பா
பொதுவாகவே ஆண்கள் தலைமுடி வெட்டுவது, ஷேவிங் செய்வது என இவற்றில் மட்டுமே அதிக கவனம் செலுத்துவார்கள். அதை தவிர, அழகுப்படுத்துவதில் பெரிய கவனம் அவர்களுக்கு இருக்காது. ஆனால் பெண்கள் பலரும் உடல் சருமத்தை கூட பளபளப்புடன் வைத்துக் கொள்ள ஆசைப்படுவார்கள்.
எனவே உங்கள் மகளுக்கு ஸ்பா டிக்கெட் வாங்கி கொடுப்பதை விட அருமையான பரிசு வேறு கிடையாது. கல்லூரி, பணிக்கு சென்று களைப்புடன் வீடு திரும்பும் மகள்களுக்கு ஒரு நாள் ஸ்பா தெரப்பி செல்ல செலவிட்டுப் பாருங்கள், குறைந்தது ஒரு மாதமாவது உங்களுக்கு நன்றி கூறிக்கொண்டே இருப்பார்கள்.
2. பரம்பரைப் பரம்பரையாக கடந்து வந்த பொருள்
உங்கள் குடும்பத்தில் பரம்பரைப் பரம்பரையாக கடந்து வந்த பொருள் ஒன்று நிச்சயம் இருக்கும். உதாரணத்திற்கு நகை, வெள்ளிப் பொருட்கள் போன்றவை. அவற்றில் ஒன்றை உங்கள் அடுத்த தலைமுறைக்கு கொடுத்து மகிழுங்கள்
3. டிஐஒய்
கடைகளில் எவ்வளவு பொருட்கள் வாங்கினாலும் உம்க்கள் கைகளால் நீங்கள் செய்து தரும் பொருட்களுக்கு என்றுமே மதிப்பு அதிகம். இணையத்தளத்தில் எளியமுறையில் நீங்களே செய்யக் கூடிய பொருட்களின் வீடியோக்கள் நிறைய இருக்கிறது. அவற்றில் உங்களுக்கு பிடித்ததை தேர்வு செய்து, உங்கள் கையால் செய்து பரிசளியுங்கள்.
அது ஒரு சாதாரண சின்ன பொருளை செய்தாலும் அவற்றில் அன்பு நிறைந்திருப்பதாலேயே உங்கள் மகளுக்கு அதிகமாக பிடித்த பரிசாக அதுவே இருக்கும்.
4. திறமையால் ஆச்சரியப்படுத்துங்கள்
ஒவ்வொருவருக்குளேயும் ஒரு திறமை மறைந்திருக்கும். அதில் ஒன்றை வெளியே எடுத்துவிட்டுப் பாருங்கள். உங்கள் பிள்ளைகளே ஷாக் ஆகிவிடுவார்கள். சிறிய பார்ட்டி ஒன்று ஏற்பாடு செய்து, ஆடல் பாடல் என அசத்துங்கள்.
உங்கள் மகளுடன் இணைந்து ஆடி பாடி மகிழுங்கள். நிச்சயம் அது ஒரு மறக்க முடியாத நாளாக மாறும்.
5. முழு நாளை குடும்பத்துடன் செலவிடுங்கள்
உங்கள் நேரத்தை குழந்தைகளுடன் செலவிடுவதை விட சிறந்த செலவு இந்த உலகில் எதுவுமே கிடையாது. ஆடம்பரம் கொடுக்காத சந்தோஷத்தை கூட உங்கள் நேரம் கொடுத்துவிடும். ஒரு நாள் முழுவதும் உங்கள் மகளுடன் செலவிடுங்கள். நிறைய பேசுங்கள். பிடித்தது பிடிக்காதது என அனைத்தையும் பகிர்ந்து அந்த நாளையே மகிழ்ச்சிகரமாக மாற்றுங்கள்.