Advertisment

தினமும் இளநீர்: குடிக்கும் நேரம் முக்கியம்: 5 நன்மைகள் இருக்கு

இளநீரில் பல நன்மைகள் உள்ளது. இந்நிலையில் இதை தினமும் குடித்தால், கிடைக்கும் நன்மைகளை நாம் தெரிந்துகொள்வோம்.

author-image
WebDesk
New Update
இளநீர்

இளநீர்

இளநீரில் பல நன்மைகள் உள்ளது. இந்நிலையில் இதை தினமும் குடித்தால், கிடைக்கும் நன்மைகளை நாம் தெரிந்துகொள்வோம். இதில் குறைந்த கலோரிகள், குறைந்த சுகர் கொண்டது.

Advertisment

சருமத்தின் நலன்

இளநீரில் சரியான திரவங்கள் உள்ளது, என்பதால் உடலை வரட்சியடையாமல் தடுக்கிறது. இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளது. இதனால் தோல் சுருக்கம் ஏற்படாது. ஆண்டி ஆக்ஸிடண்ட் உடலை  சேதத்திலிருந்து பாதுகாக்கிறது. இதில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் இ உள்ளது. இது சருமத்தின் ஆரோக்கியத்திற்கு உதவும்.

சிறுநீரகத்தில் ஏற்படும் கல்லை இது கரைக்க உதவுகிறது. சிறுநீரக கல் ஏற்படும் போது, நாம் இளநீர் குடிக்க வேண்டும். இளநீரில் அதிக நார்சத்து உள்ளது, இது ஜீரண சக்தியை அதிகரிக்கும். இந்நிலையில் இதில் என்சைம் உள்ளது, இது உணவை உடைக்க உதவும்.

இளநீரில், பொட்டாஷியம், சோடியம், மெக்னீஷியம் உள்ளது. இவை முக்கியமான எலக்ட்ரோலைட்ஸ். இது உடலில் உள்ள திரவங்களின் அளவை சீராக்கும். அதிக வியர்வை வழியும் நபர்கள் இதை குடிக்கலாம்.

இது ரத்த அழுத்தத்தை குறைக்கும், குறிப்பாக அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதை எடுத்துகொள்ள வேண்டும். இதில் உள்ள அதிக பொட்டாஷியம் சத்து அதை செய்ய வைக்கிறது. இந்நிலையில் காலை வெறும் வயிற்றில் இளநீர் குடித்தால் அதில் உள்ள சத்துக்கள் உடலில் சேரும் என்று கூறப்படுகிறது. உணவு சாப்பிட்ட பின்பு  3 மணி நேரம் கழித்து  இதை குடிக்கலாம்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment