scorecardresearch

Kitchen Hacks: இஞ்சி பூண்டு பேஸ்ட், கிரிஸ்பி பூரி, காளான் சமைக்க

சில கிச்சன் ஹேக்குகள் நிச்சயமாக சமையலை ஒரு மென்மையான அனுபவமாக மாற்றும்.

Kitchen Hacks: இஞ்சி பூண்டு பேஸ்ட், கிரிஸ்பி பூரி, காளான் சமைக்க
Daily Cooking hacks

சமையலறையில் நேரத்தை செலவிடும் அனைவருக்கும் எல்லா நாட்களும் ஒரே மாதிரியாக இருக்காது. சில நாட்கள் சிறப்பாக இருந்தாலும், பல நாட்கள் மோசமாகி விடுகின்றன. நீங்களும் அந்த ‘கெட்ட கிச்சன் நாட்களில்’ ஒன்றைக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், சில கிச்சன் ஹேக்குகள் இங்கே உள்ளன, அது நிச்சயமாக சமையலை ஒரு மென்மையான அனுபவமாக மாற்றும்.

இஞ்சி பூண்டு பேஸ்ட்

பெரும்பாலான இந்திய சமையலறைகளில் இஞ்சி பூண்டு விழுது பிரதானமாக உள்ளது. அரைத்த இஞ்சி பூண்டு பேஸ்ட், ரொம்ப நாட்கள் கெடாமல் இருக்க, , அரைத்தவுடன் சிறிது உப்பு மற்றும் எண்ணெய் சேர்க்கவும்.

பச்சை காய்கறி சமைக்க

பச்சைக் காய்கறிகளை சமைக்கும் போது மூடி வைக்கக் கூடாது. பாத்திரத்தை மூடுவது அவற்றின் பிரகாசமான நிறத்தை வெளிர் பச்சை நிறமாக மாற்றுகிறது.

கிரிஸ்பி பூரி

முழு கோதுமை மாவில் ஒரு டேபிள்ஸ்பூன் ரவாவை சேர்த்தால் கிரிஸ்பி பூரி கிடைக்கும்.

ஃபிரெஷ் தேங்காய்

தேங்காய்களை துருவி, அவற்றை பிரிசரில் உறைய வைக்கலாம். சமைப்பதற்கு 10-15 நிமிடங்களுக்கு முன் எடுத்து, தேவைக்கேற்ப பயன்படுத்தவும்.

காளான் சமைக்க

காளான்கள் தண்ணீரை உறிஞ்சிவிடும், எனவே அவற்றைக் கழுவ வேண்டிய அவசியமில்லை. டிஷ் சொதசொதப்பாக மாறாமல் இருக்க, ஈரமான துணியால் சுத்தம் செய்யவும்.

சர்க்கரை

சர்க்கரையில் எறும்பு வராமல் இருக்க, 4-5 கிராம்புகளை வைக்கவும்.

இந்த ஹேக்ஸ் சுவாரஸ்யமாக இருக்கிறதா? இந்த கிச்சன் ஹேக்குகள், உங்கள் தினசரி சமையலை நிச்சயமாக ஒரு மென்மையான அனுபவமாக மாற்றும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Daily cooking hacks by chef sanjeev kapoor