சமையலறை சிலரை உற்சாகப்படுத்தலாம், ஆனால் சிலருக்கு அவர்கள் இருக்க விரும்பாத ஒரே இடம் அது. இருப்பினும் நீங்கள் அவசரமாக ஏதாவது சமைக்க வேண்டிய நிலைமை கண்டிப்பாக வரும். இதுபோன்ற சமயங்களில், சமைப்பதைத் தொந்தரவில்லாத அனுபவமாக்கும் குறிப்புகள் இங்குள்ளன.
Advertisment
கீழே பாருங்கள்
* சூப்பர் சாஃப்ட் ரொட்டி செய்ய மாவில் ஒரு சிட்டிகை உப்பு, ஒரு சிட்டிகை எண்ணெய் மற்றும் வெதுவெதுப்பான நீரை சேர்க்கவும். நீங்கள் ரொட்டி செய்வதற்கு முன் மாவை 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
*மென்மையான பஞ்சுபோன்ற பூரி செய்ய மாவை தண்ணீருக்கு பதிலாக பாலுடன் பிசையவும்.
Advertisment
Advertisement
*காய்கறிகளை செய்தித்தாள்களில் போர்த்தி ஃபிரிட்ஜில் வைப்பதன் மூலம் குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு காய்கறிகளின் ஆயுளை அதிகரிக்கலாம்.
*பச்சை மிளகாயின் காம்பை நீக்கி ஒரு டிஷ்யூ பேப்பரில் சுற்றி காற்றுப்புகாத டப்பாவில், ஃபிரிட்ஜில் வைக்கவும். இது அவற்றை புதியதாக வைத்திருக்க உதவுகிறது.
*சாலட் தயாரிப்பதற்கு முன் உங்கள் சாலட் இலைகள் மொறுமொறுப்பாக இருக்க, ஐஸ் வாட்டரில், சில துளிகள் எலுமிச்சை சேர்த்து அதில் போட்டு வைக்கவும்.
*முட்டைகளை கொதிக்க வைக்கும் போது அதில் சிறிது வெள்ளை வினிகர் சேர்க்கவும். அவ்வாறு செய்தால் உரிக்கும் போது முட்டை ஓடு எளிதாக வந்துவிடும். மேலும் கொதிக்கும் போது முட்டை உடைந்தால் அது தண்ணீரில் பரவாது.
*பட்டாணி, கேரட் மற்றும் பீன்ஸ் போன்ற காய்கறிகளை வேகவைக்கும் போது அதனுடன் ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்க்கவும். இதனால் அவற்றில் நிறம் மாறாமல் அப்படியே இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“