பட்டாணி, கேரட், பீன்ஸ் வேகவைக்கும் போது… சூப்பர் 7 கிச்சன் சீக்ரெட்ஸ்

முட்டைகளை கொதிக்க வைக்கும் போது, அதில் சிறிது வெள்ளை வினிகர் சேர்க்கவும். அவ்வாறு செய்தால், உரிக்கும் போது முட்டை ஓடு எளிதாக வந்துவிடும்.

lifestyle
Cooking Hacks

சமையலறை சிலரை உற்சாகப்படுத்தலாம், ஆனால் சிலருக்கு அவர்கள் இருக்க விரும்பாத ஒரே இடம் அது. இருப்பினும் நீங்கள் அவசரமாக ஏதாவது சமைக்க வேண்டிய நிலைமை கண்டிப்பாக வரும். இதுபோன்ற சமயங்களில், சமைப்பதைத் தொந்தரவில்லாத அனுபவமாக்கும் குறிப்புகள் இங்குள்ளன.

கீழே பாருங்கள்

* சூப்பர் சாஃப்ட் ரொட்டி செய்ய, மாவில் ஒரு சிட்டிகை உப்பு, ஒரு சிட்டிகை எண்ணெய் மற்றும் வெதுவெதுப்பான நீரை சேர்க்கவும். நீங்கள் ரொட்டி செய்வதற்கு முன் மாவை 20 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

*மென்மையான பஞ்சுபோன்ற பூரி செய்ய, மாவை தண்ணீருக்கு பதிலாக பாலுடன் பிசையவும்.

*காய்கறிகளை செய்தித்தாள்களில் போர்த்தி ஃபிரிட்ஜில் வைப்பதன் மூலம் குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு காய்கறிகளின் அடுக்கு ஆயுளை அதிகரிக்கலாம்.

*பச்சை மிளகாயின் காம்பை நீக்கி, ஒரு டிஷ்யூ பேப்பரில் சுற்றி, காற்றுப்புகாத டப்பாவில், ஃபிரிட்ஜில் வைக்கவும். இது அவற்றை புதியதாக வைத்திருக்க உதவுகிறது.

*சாலட் தயாரிப்பதற்கு முன், உங்கள் சாலட் இலைகள் மொறுமொறுப்பாக இருக்க, ஐஸ் வாட்டரில், சில துளிகள் எலுமிச்சை சேர்த்து, அதில் போட்டு வைக்கவும்.

*முட்டைகளை கொதிக்க வைக்கும் போது, ​​அதில் சிறிது வெள்ளை வினிகர் சேர்க்கவும். அவ்வாறு செய்தால், உரிக்கும் போது முட்டை ஓடு எளிதாக வந்துவிடும். மேலும் கொதிக்கும் போது முட்டை உடைந்தால் அது தண்ணீரில் பரவாது.

*பட்டாணி, கேரட் மற்றும் பீன்ஸ் போன்ற காய்கறிகளை வேகவைக்கும் போது அதனுடன் ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்க்கவும். இதனால் அவற்றில் நிறம் மாறாமல் அப்படியே இருக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Daily kitchen hacks egga chapathi carrot beans cooking hacks

Exit mobile version