துவரம் பருப்பு அல்லது பாசிப் பருப்பு சேர்த்து சுவையான கமகம துவையல் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு அல்லது பாசிப் பருப்பு- கால் கப்
வர மிளகாய்- 2
புளி- சிறிதளவு
தேங்காய்த் துருவல்- 1 டீஸ்பூன்
பூண்டு- 2 பல்
உப்பு தேவையான அளவு
செய்முறை
முதலில் கடாயில், பருப்பு போட்டு பொன்னிறமாக வறுக்கவும். பிறகு, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும். இவை ஆறியதும், மிக்ஸி எடுத்து வறுத்த பருப்பை சேர்த்து அதில் புளி, தேங்காய்த் துருவல், உப்பு ஆகியவற்றைப் போட்டு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். கடைசியாக, பூண்டு சேர்த்து ஒருமுறை சுற்றவிட்டு அரைக்கவும். அவ்வளவு தான் சுவையான செட்டிநாடு ஸ்டைல் பருப்புத் துவையல் ரெடி. சுடு சோற்றிக்கு சேர்த்து சாப்பிடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil