dal makhani recipe tamil dal makhani : வட இந்திய ரெசிப்பியான தால் மக்கானியை உங்கள் விருப்பத்திற்கேற்ப பராத்தாக்களுடன் சாப்பிட்டு மகிழலாம். இது பஞ்சாப் மற்றும் வட இந்தியாவின் இதர பகுதிகளில் பிரசித்தி பெற்ற சுவையான உணவு.
இந்த ரெசிப்பியை தயாரிப்பதற்கு சிறிது கூடுதல் நேரம் எடுத்தாலும் இதன் அசல் சுவை உங்கள் சுவை மொட்டுக்களை தூண்டி இன்னும் வேண்டுமென்று கேட்க வைக்கும். வாங்க வீட்டிலேயே தால் மக்கானி எப்படி செய்வது என்று தெரிந்துக்கொண்டு சமைத்து பாருங்கள்.
dal makhani recipe tamil: செய்முறை!
கருப்பு ஊளுந்தையும் ராஜ்மாவையும் சேர்த்து அத்துடன் தண்ணீர் சேர்த்து வேகவிடுங்கள். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் சிறிது உப்பு, மஞ்சள் மற்றும் கடுகு எண்ணெய் சேர்க்கவும். குறைந்த தீயில் வேகவைத்து 7 முதல் 8 விசில் வரும் வரை வேகவிடவும்.
ஒரு தனி பேனில் எண்ணைய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அரைத்த இஞ்சி பூண்டு பேஸ்டை சேர்த்து 20 முதல் 30 விநாடிகள் வதக்கவும். பிறகு இதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். இப்போது சீரகம் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.இதில் தக்காளி ப்யூரி சேர்த்து 3 முதல் 4 நிமிடங்கள் வேகவைத்து பிறகு பச்சை மிளகாய் மற்றும் சிகப்பு மிளகாய் தூளை சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் வதக்கவும். இப்போது மசாலா ரெடி. அடுப்பை அணைத்து விடுங்கள்.
பருப்பு 8 முதல் 10 விசில் வரை வெந்த பிறகு குக்கர் மூடியைத் திறந்து வேகவைத்த மசாலாவுடன் பருப்பை சேர்க்கவும். சுவையை அதிகரிக்க இந்த கட்டத்தில் சிறிது வெண்ணெய் சேர்க்கவும்.
இப்போது சுவையான தால் மக்கானி பரிமாறுவதற்கு தயாராக உள்ளது. உங்கள் விருப்பத்திற்கேற்ப ரொட்டி, சப்பாத்தி அல்லது பராத்தா போன்றவற்றுடன் சேர்த்து சுவைத்து மகிழலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil