கலா மாஸ்டர், ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய சினிமாவின் பிரபல நடன இயக்குநராக இருந்து வருகிறார். ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் மூலம் நடிகையாகவும் மாறி இருக்கிறார்…
Advertisment
நடன இயக்குநர் ரகுராம் மாஸ்டர், கலா அக்கா கிரிஜாவின் கணவர். கலாவின் தங்கை பிருந்தாவும், புகழ்பெற்ற நடன இயக்குநராகத் திகழ்கிறார்.
ஒருமுறை கலா மாஸ்டர் பிரபல தமிழ் இதழுக்கு அளித்த பேட்டியில், தான் சினிமாத் துறைக்குள் நுழைந்தது எப்படி என்பது குறித்து சுவாரஸ்யமான பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
Advertisment
Advertisements
‘ஹீரோ’ என்ற இந்தி படத்தை தெலுங்கில் எடுத்தார்கள். அதில் நாகார்ஜுனா நடித்தார். அதுதான் அவருக்கு முதல் படம். இந்த படத்திற்கு ரகு மாஸ்டர் தான் நடன இயக்குநர். அதே சமயத்தில் ரகு மாஸ்டருக்கு ’புன்னகை மன்னன்’ படமும் இருந்ததால், அந்தப் படத்தை என்னிடம் விட்டுவிட்டு எனக்கு உதவியாக பிருந்தாவை அனுப்பினார்கள்.
அப்படி தான் பிருந்தா விருப்பமில்லாமல் உள்ளே வந்தாள். ஆனால், நான் ஏப்ரல், மே என விடுமுறை நாட்கள் வந்தால்கூட என் அப்பாவிடம் சண்டைபோட்டு மாமாவுடன் படப்பிடிப்பிற்குச் செல்வேன்.
நான் சினிமாவுக்குள் நுழைந்த காலகட்டத்தில் புலியூர் சரோஜா, தாரா மாஸ்டர் என ஒரு நான்கைந்து பேர் தான் இருந்தார்கள். அப்போது நான் சிறுபிள்ளை என்பதால் பெரிதாக எதுவும் தெரியாது. ஆனால், ரகு மாஸ்டரிடம் உதவியாளராக இருந்ததால் நடனம் பற்றி எனக்கு எல்லாம் தெரிந்திருந்தது. ஆனாலும் சினிமாவுக்குள் அடி எடுத்து வைக்கும் போது எனக்கும் போராட்டங்கள் இருக்கத்தான் செய்தது.
ரகு மாஸ்டர் எப்போதுமே என்னிடம், அவருடைய உதவியாளர் என்று சொல்லி வாய்ப்புக் கேட்கக்கூடாது என்று சொல்வார்.
என்னுடைய திறமையால் மட்டுமே நான் முன்னேற வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அதனால் ஒவ்வொரு திரைப்பட அலுவலகமாக ஏறி இறங்கித்தான் எங்களுக்கான வாய்ப்புகளை அமைத்துக் கொண்டோம். எங்கள் நடனத்தின் மூலமாகத்தான் ஒவ்வொரு படியாக மிக மெதுவாகவே நாங்கள் முன்னேறி வந்தோம்.
அப்போதெல்லாம் சினிமாவில் பெண்கள் கேமராவுக்குப் பின்னால் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இருந்தார்கள். ஆனால், இப்போது ஒரு படப்பிடிப்பு தளத்தில் 100 பேர் இருந்தால், அதில் பாதிக்குப் பாதி பெண்களும் நிறைந்து இருக்கிறார்கள். இது நல்ல முன்னேற்றம் என்று தான் சொல்வேன்’ இப்படி பல விஷயங்களை கலா மாஸ்டர் அந்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார்…
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“