கோடைகாலம் ஆரம்பித்துவிட்டாலே வெயிலின் தாக்கம் அதிகரிக்கும், அதனுடன் சேர்ந்து வியர்வையும் அதிகமாகவே வெளியேறும். வியர்வை அதிகமாகும் போது தலை முதல் கால் வரை பல சருமப் பிரச்சனைகள் ஏற்படும். அவற்றில் முக்கியமானது பலருக்கும் இருக்கும் பொடுகுத் தொல்லை (Dandruff). இந்தப் பொடுகுப் பிரச்சனையிலிருந்து விடுபடவும், அது வராமல் தடுக்கவும் வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய ஒரு அற்புதமான ஹேர் ஆயில் பற்றி இந்த வீடியோவில் பேசுகிறார் டாக்டர் நித்யா.
Advertisment
மூலிகை ஹேர் ஆயில் தயாரிக்கத் தேவையான பொருட்கள்:
நல்லெண்ணெய்: 1 லிட்டர் விளக்கெண்ணெய்: 250 - 300 மில்லி லிட்டர் (நல்லெண்ணெயுடன் கலந்து வைத்துக்கொள்ளவும்)
Advertisment
Advertisements
இதனுடன் சேர்க்க வேண்டிய மூலிகைகள் (சாறு அல்லது விழுது):
பொடுதலை இலை சாறு விழுதி இலை சாறு வெள்ளை வெங்காய சாறு எலுமிச்சை சாறு
இவையும் ஒவ்வொன்றும் சுமார் 250 கிராம் இருக்குமாறு அரைத்து தனித்தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
இதனுடன் சேர்க்க வேண்டிய மூலிகை பொடிகள்:
பரங்கிப்பட்டை பொடி: தோல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிறந்த மூலிகை. கஸ்தூரி மஞ்சள்: தோல் நோய்களுக்கு மிகவும் முக்கியமானது.
கருஞ்சீரகம்: பூஞ்சைத் தொற்றுக்கு மிகச் சிறந்தது. இதன் எண்ணெயே பல மருத்துவ குணங்களைக் கொண்டது.
கார்போக அரிசி: கருஞ்சீரகத்துடன் சேர்த்து பயன்படுத்த வேண்டும்.
தயாரிப்பு முறை:
முதலில் நல்லெண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் கலவையை அடுப்பில் வைத்து, ஒவ்வொன்றாக அரைத்து வைத்துள்ள மூலிகை விழுதுகளைச் சேர்க்கவும். அதன் பிறகு மூலிகை பொடிகளையும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். தைலம் கெட்டியானதும், வடிகட்டி எடுத்து பயன்படுத்தலாம்.
பயன்கள்:
இந்த எண்ணெயை வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு நாட்கள் தலைக்கு தடவிக்கொள்ளலாம். தலையில் தடவி அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் கழித்து, ஹெர்பல் ஹேர் வாஷ் பயன்படுத்தி குளித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
இந்தத் தைலத்தை தொடர்ந்து பயன்படுத்தி வருவதன் மூலம், பொடுகு சார்ந்த பிரச்சனைகள், உடல் உஷ்ணம், அதிகமான முடி உதிர்வு ஆகியவை குறையும். குறிப்பாக, கருஞ்சீரகமும் கார்போக அரிசியும் இதில் இருப்பதால், நாட்பட்ட தோல் நோய்கள், பூஞ்சைத் தொற்றுகள் (Ringworm) மற்றும் அலோபீசியா (Alopecia) எனப்படும் புழுவெட்டுப் பிரச்சனையை (தலையில் வட்ட வட்டமாக முடி கொட்டுதல்) சரி செய்ய இந்த எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
நீண்ட நாட்களாக தலைமுடி சார்ந்த பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் இந்த எண்ணெயை நிச்சயமாக முயற்சி செய்து பார்க்கலாம்.