முடி உதிர்வு பிரச்சனை என்பது தற்போது பலருக்கும் உள்ளது. உடல் நிலையில் மாற்றம், வாழ்க்கை முறை மாற்றம் என பல்வேறு காரணங்களால் முடி உதிர்வு ஏற்படலாம். எனினும், பலருக்கு பொடுகு பிரச்சனை இருப்பதால் முடி உதிர்வு ஏற்படுவதாக கூறப்படுகிறது. அவ்வாறு பொடுகு பிரச்சனையை எவ்வாறு சீரமைப்பது என மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
தலையில் ஏற்படும் வறட்சி தன்மை காரணமாக பொடுகு உருவாகும் என மருத்துவர் சிவராமன் கூறுகிறார். உடலில் பித்தம் அதிகரித்தால், சூடு அதிகரிக்கும் எனக் கூறும் மருத்துவர் சிவராமன், பித்தத்தை குறைத்தால் பொடுகு தொல்லை நீங்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, தினசரி காலையில் தலைக்கு குளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். குளிப்பது என்பது வெறும் அழுக்கை நீக்குவதற்காக மட்டுமல்ல எனவும், உடல் சூட்டை குறைத்து குளிர்ச்சியாக்கவும் உதவும் என அவர் கூறியுள்ளார்.
அதேபோல், அடிக்கடி தலைக்கு குளிக்காதவர்களுக்கு தான் பெரும்பாலும் பொடுகு தொல்லை ஏற்படும் எனவும் சிவராமன் தெரிவித்துள்ளார். பொடுகு தொல்லையை நீக்க பல விதமான முயற்சி செய்யப்பட்டு வரும் சூழலில், உடல் சூட்டை குறைப்பதன் மூலம் பொடுகை கட்டுப்படுத்தி விடலாம் என சிவராமன் பரிந்துரைக்கிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“