பொடுகு பிரச்சனைக்கு ஈஸி தீர்வு; இனிமே ஹேர்பேக்கை இப்படி யூஸ் பண்ணுங்க
பொடுகு தொல்லை, முடி அடர்த்தியின்மை போன்ற பிரச்சனைகளுக்கு எவ்வாறு ஹேர்பேக் தயாரித்து பயன்படுத்தலாம் என்று இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம். இது அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு தரக் கூடியது.
பொடுகு தொல்லை, முடி அடர்த்தியின்மை போன்ற பிரச்சனைகளுக்கு எவ்வாறு ஹேர்பேக் தயாரித்து பயன்படுத்தலாம் என்று இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம். இது அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு தரக் கூடியது.
இன்றைய சூழலில் இளைஞர்களிடம் இருக்கக் கூடிய பொதுவான பிரச்சனையாக முடி உதிர்வு காணப்படுகிறது. ஆண் மற்றும் பெண் என அனைத்து பாலினத்தவரிடத்திலும் வயது பேதமின்றி முடி உதிர்வு பிரச்சனை காணப்படுகிறது.
Advertisment
குறிப்பாக, ஒரு நபர் பார்க்கும் வேலையின் நிமித்தமாகவும் முடி உதிர்வு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. உதாரணத்திற்கு, அடிக்கடி இரவு பணி பார்க்கும் போது தூக்கமின்மை காரணமாக முடி உதிரும் இருக்கும். இது தவிர உணவு முறை மாற்றம், வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் சத்துக் குறைபாடு இருந்தாலும் முடி உதிர்வு உருவாகும். இத்தகைய காரணிகளை சீரமைப்பதன் மூலம் முடி உதிர்வை தடுக்க முடியும்.
இது மட்டுமின்றி பெரும்பாலான நேரத்தில் பொடுகு தொல்லை இருந்தாலும் முடி உதிர்வு ஏற்படும். இதனை போக்குவதற்கு ஹேர்பேக் பயன்படுத்தலாம். இதற்காக கடைகளில் இருந்து விலை உயர்ந்த, இரசாயனங்கள் சேர்க்கப்பட்ட பொருட்களை வாங்க வேண்டிய அவசியம் இல்லை. எளிமையாக வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு ஹேர்பேக் தயாரிக்கலாம்.
இதற்காக, நமது தலை முடிக்கு தேவையான அளவு வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். இத்துடன் கருஞ்சீரகம், ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலை, இரண்டு ஸ்பூன் தயிர் மற்றும் சிறிதளவு விளக்கெண்ணெய் ஆகியவற்றை சேர்த்து பசை பதத்திற்கு அரைக்க வேண்டும். இப்போது நமக்கு தேவையான ஹேர்பேக் ரெடியாகி இருக்கும்.
Advertisment
Advertisements
இனி ஹேர்பேக் பயன்படுத்துவதற்கு முன்பாக, தலையில் சிறிதளவு எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். அதன் பின்னர், ஹேர்பேக் தேய்த்து விட்டு சுமார் 20 நிமிடங்கள் கழித்து குளித்து விடலாம். இவ்வாறு வாரத்திற்கு இரண்டு முறை செய்தால், தலை முடி தொடர்பான பிரச்சனைகள் தீர்ந்து விடும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.