/indian-express-tamil/media/media_files/2025/06/03/xAyFihfYGk84YbI4D6CP.jpg)
Dandruff treatment at home Arugampul thailam
பளபளக்கும் கூந்தல் யாருக்குத்தான் பிடிக்காது? ஆனால், தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு சவால் விடுக்கும் விஷயங்களில் ஒன்று பொடுகு. புதுப்புது ஷாம்புகள் வந்தாலும், இந்தப் பொடுகு தொல்லை மட்டும் தீர்ந்தபாடில்லை. அதிலும் குறிப்பாக, டீன் ஏஜ் பருவத்தினருக்கு இது ஒரு பெரிய தலைவலி!
பொடுகு ஏன் வருகிறது?
பொடுகு என்பது ஒரு பூஞ்சைத் தொற்று. டீன் ஏஜ் பருவத்தில், தலையில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் அதிகமாகச் செயல்படுவதால், இந்தத் தொற்று எளிதாகப் பரவுகிறது.
பொடுகுத் தொல்லையை நீங்கள் சந்தித்தால், உங்கள் சீப்பு, தலைக்கு பயன்படுத்தும் எண்ணெய், மற்றும் துண்டுகளை அடிக்கடி கழுவுவது அவசியம். ஏனெனில் இவை பூஞ்சை பரவுவதற்கு காரணமாக இருக்கலாம்
இதனுடன் வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய அருகம்புல் தைலம் பொடுகை நீக்க ஒரு சிறந்த வழி, என்கிறார் டாக்டர் ஜெயரூபா.
வீட்டிலேயே அருகம்புல் தைலம் தயாரிக்கும் முறை
அருகம்புல் சாறு - 100 மில்லி
தேங்காய் எண்ணெய் - 100 மில்லி
ஓமம் - 1 டீஸ்பூன் (பாலுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்)
செய்முறை:
அருகம்புல் சாறு, தேங்காய் எண்ணெய், மற்றும் அரைத்த ஓமம் ஆகிய மூன்றையும் ஒன்றாகக் கலந்து, சாறு வற்றும் வரை எண்ணெயைக் காய்ச்சவும்.
காய்ச்சிய இந்த எண்ணெயை ஆறவைத்து, தலையில் தடவி, மூன்று விரல்களால் மெதுவாக மசாஜ் செய்யவும். குளிக்கும் முன் மசாஜ் செய்வது நல்லது.
இப்படித் தொடர்ந்து செய்து வந்தால், பொடுகுத் தொல்லை நீங்கி, கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.