நடிகை சன்னி லியோனின் கணவர் டேவிட் தந்தையர் தினத்தன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஃபோட்டோ ஒன்று கடுமையான விமர்சனத்தை பெற்றுள்ளது.
நாடு முழுவதும் கடந்த ஞாயிற்றுகிழமை தந்தையர் தினம் விமர்சையாக கொண்டாடப்பட்டது. எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் வாழ்த்து மடல்கள் பொங்கின. சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் , விளையாட்டு வீரர்கள் போன்றோர்களும் தங்கள் தந்தை மற்றும் பிள்ளைகளுடன் எடுத்துக் கொண்ட புகைபடத்தை இணையத்தில் பகிர்ந்திருந்தனர். கற்பனைக்கு எட்டாத அன்பு.
இந்நிலையில், பாலிவுட் நடிகை சன்னி லியோனின் கணவர் டேவிட், மனைவி மற்றும் மகள் நிஷாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை ”தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.அந்த புகைப்படத்துடன் தந்தையர் தின வாழ்த்து செய்தியையும் பதிவிட்டிருந்தார். அதில்,” இன்று தந்தையர் தினம். கற்பனைக்கு எட்டாத அன்பு. என் மீதும், நிஷா கவுர் மீதும் நீ கொண்ட அன்பிற்காக நன்றி. எது சிறந்தது என்று எப்போதும் உணர்தவள் நீ. என் இதயத்தைத் திருடிய சன்னி லியோன்” என்று கூறியிருந்தார்.
A post shared by Daniel "Dirrty" Weber (@dirrty99) on
இந்த பதிவிற்கு பலரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளன. காரணம், இந்த பதிவில் டேவிட் பதிவிட்டிருந்த புகைப்படம் தான் இவ்வளவு விமர்சனத்தை எழுப்பியுள்ளது. அந்த புகைப்படம் மிகவும் ரகசியமாக பாதுகாக்கப்பட வேண்டியது. நீங்கள் உங்கள் குடும்பத்துடன் தனிமையில் இருக்கும் புகைப்படத்தை எப்படி சமூகவலைத்தளங்களில் பதிவிடலாம்? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதே நேரத்தில் தனது கணவனை விட்டுக் கொடுக்காத சன்னி லியோன் பதிலுக்கு தனக்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மற்றொரு புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், "ஆயிரம் பேர் இந்தப் புகைப்படத்தை விமர்சித்தாலும், இதில் நிரம்பி வழியும் அன்பை கண்டு வியக்கிறேன். என்று கூறியுள்ளார். சன்னி லியோனில் பதிவை ரசித்த நெட்டிசன்கள் அவரது கணவரின் பதிவிற்கு மட்டும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அதற்கு காரணம் சன்னி லியோன் வெளியிட்ட மற்றொரு ஃபோட்டோ!!!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.