/indian-express-tamil/media/media_files/2025/07/20/dark-spots-hyperpigmentation-melasma-home-remedy-2025-07-20-09-43-31.jpg)
Dark spots hyperpigmentation melasma home remedy
கரும்புள்ளிகள், ஹைப்பர் பிக்மென்டேஷன், மெலஸ்மா, ஏஜிங் ஸ்பாட்ஸ் போன்ற சரும பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கு ஒரு சிறந்த தீர்வை டாக்டர் விவேக் ஜோஷி பரிந்துரைக்கிறார். இந்த சூப்பர் ஃபேஸ் மாஸ்க் உங்கள் சருமத்தைப் பொலிவாக்கி, மேற்கண்ட பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
இந்த ஃபேஸ் மாஸ்க் எப்படி தயாரிப்பது?
தேவையான பொருட்கள்:
அரிசி - 3 டீஸ்பூன் அல்லது 1.5 டேபிள்ஸ்பூன்
கிரீன் டீ - சிறிதளவு
அதிமதுரம் தூள் (Licorice powder) - சிறிதளவு
செய்முறை:
மூன்று டீஸ்பூன் அரிசியை எடுத்து, இரவு முழுவதும் அல்லது குறைந்தபட்சம் மூன்று முதல் நான்கு மணிநேரம் ஊற வைக்கவும். ஊறவைத்த அரிசியை நன்கு அரைத்து, வடிகட்டி அதன் சாற்றை தனியாக எடுத்துக்கொள்ளவும். வழக்கமாக கிரீன் டீ தயாரிப்பது போல, சிறிதளவு கிரீன் டீயைத் தயாரித்து ஆறவிடவும்.
அரிசி சாற்றுடன், தயாரித்து வைத்துள்ள கிரீன் டீ மற்றும் அதிமதுர பொடி சேர்த்து கெட்டியான பசை பதத்திற்கு வரும் வரை நன்கு கலக்கவும்.
எப்படி பயன்படுத்துவது?
முதலில் உங்கள் முகத்தை நன்கு சுத்தம் செய்யவும். தயாரித்த ஃபேஸ் மாஸ்க்கை முகத்தில் தடவி, 15-20 நிமிடங்கள் உலர விடவும். பின்னர், முகத்தில் மெதுவாக மசாஜ் செய்தவாறே முகத்தில் இருந்து நீக்கவும். மாஸ்க்கை நீக்கிய பிறகு, உங்கள் முகத்தில் வைட்டமின் சி சீரம் தடவவும்.
இந்த எளிய ஃபேஸ் மாஸ்க்கைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், கரும்புள்ளிகள், ஹைப்பர் பிக்மென்டேஷன், மெலஸ்மா மற்றும் வயதான தோற்றத்தால் ஏற்படும் புள்ளிகள் மறைந்து, உங்கள் சருமம் பொலிவு பெறுவதை நீங்களே உணர்வீர்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.