நம்மிடையே பலருக்கும் தோல் பகுதியில் சிக்கன் ஸ்கின் போன்று, அங்கங்கே மேடாகவும், வறட்சியாகவும், சற்று சொரசொரப்பாகவும், கருநிறத் திட்டுகளாகவும் காணப்படும். குறிப்பாக, கைகள், கன்னங்கள், தொடை பகுதிகள், பிட்டம் ஆகிய இடங்களில் இது அதிகமாகக் காணப்படும். இதை நாம் கெரடோசிஸ் பைலாரிஸ் (Keratosis Pilaris) என்று அழைக்கிறோம்.
Advertisment
இந்தத் திட்டுக்களைப் பலர் சாதாரணமாகக் கருதுகிறார்கள். ஆனால், இது உடலில் வாதம் அதிகரிப்பதற்கான ஒரு வெளிப்பாடு என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.
இந்த பிரச்சனை இருந்தால், ஒரு முறையாவது உடலை டிடாக்ஸ் (நச்சு நீக்கம்) செய்வது மிகவும் முக்கியம். இதற்குப் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றலாம்:
Advertisment
Advertisements
காலையில் வெறும் வயிற்றில் ஒரு டீஸ்பூன் நெய் சாப்பிடுவது நன்மை பயக்கும்.
குப்பைமேனி, மஞ்சள், பால் ஆகியவற்றை சேர்த்து அரைத்து, உடம்பு முழுவதும் பூசி, பின்னர் நலுங்கு மாவு தேய்த்துக் குளிப்பது நல்ல பலன் தரும். இந்த முறைகளை கடைபிடிப்பதன் மூலம், கெரடோசிஸ் பைலாரிஸ் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
உடல் உள்ளிருந்து சுத்தமாகி, தோல் வெளியே அழகு பெறும். வாதம் சீராகி, இந்தத் தோல் பிரச்சனைகள் மீண்டும் வராமல் தடுக்கப்படும்.