Advertisment

ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் பேரீட்சை விதை பொடி: மருத்துவ நிபுணர்கள் சொல்வது என்ன?

விதைகளில் உள்ள கூறுகள் குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்த உதவும், இது நீரிழிவு நோயாளிகள் அல்லது நிலைமையை உருவாக்கும் அபாயத்தில் உள்ளவர்களுக்கு அவை பயனுள்ளதாக இருக்கும்.

author-image
WebDesk
New Update
dates seeds powder benefits

Dates seeds powder benefits

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பேரிச்சம்பழங்கள் அவற்றின் ஆற்றலை அதிகரிக்கும் பண்புகளுக்காக பிரபலமாக உள்ளன. ஆனால் நாம் தூக்கி எறியும் அதன் விதை, சத்தானதா என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

Advertisment

பேரீட்சை விதை பொடி ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும்.

பேரீச்சம்பழ விதைகள் ஒரு ஊட்டச்சத்து நிறைந்தவை. ரத்த சர்க்கரை அளவுகளில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. விதைகளில் உள்ள கூறுகள் குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்த உதவும், இது நீரிழிவு நோயாளிகள் அல்லது நிலைமையை உருவாக்கும் அபாயத்தில் உள்ளவர்களுக்கு அவை பயனுள்ளதாக இருக்கும், என்கிறார் உணவியல் நிபுணர் சுஷ்மா. (chief dietitian, Jindal Naturecure Institute)

பேரீச்சம்பழ விதைகள், குடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமான உணவு நார்ச்சத்துகளை கொண்டுள்ளது. இந்த நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது, மேலும் முழுமை உணர்வுக்கு பங்களிக்கிறது, எடை மேலாண்மைக்கு உதவுகிறது, என்று ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் சங்கீதா திவாரி பகிர்ந்து கொண்டார்.

பேரீச்சம்பழத் தூளை உட்கொள்வது ஹைப்பர் கிளைசெமிக் நோயாளிகளின் ரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்கும் திறன் கொண்டது மற்றும் சாதாரண மக்களில் கிளைசெமிக் குறியீட்டை மாற்றாது. அதாவது சர்க்கரை நோயாளிகளுக்கு பேரீச்சம்பழம் நன்மை பயக்கும்.

பேரீச்சம்பழ விதைகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதால், அவை உங்கள் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுகின்றன, அவை செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகின்றன மற்றும் இதய நோய் அபாயத்தைக் குறைக்கலாம்.

பேரீச்சம்பழ விதைகள் சாத்தியமான நன்மைகளை வழங்கினாலும், அவற்றை மிதமாக உட்கொள்வது அவசியம். உங்கள் உடல் எவ்வாறு பதிலளிக்கிறது என்பதைக் கவனியுங்கள், குறிப்பாக ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் திறனுக்காக நீங்கள் தூளைப் பயன்படுத்தினால்.

உணவுமுறையில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன் ஒரு சுகாதார நிபுணரிடம் பேசுவது புத்திசாலித்தனமானது, குறிப்பாக உங்களுக்கு முன்பே இருக்கும் மருத்துவ நிலைமைகள் அல்லது மருந்து உட்கொண்டால், என்று சுஷ்மா எச்சரித்தார்.

பேரீட்சை விதையில் பொடி எப்படி செய்வது?

பேரீட்சை விதைகள்

பேக்கிங் ஷீட்

ஓவன்

பிளெண்டர் அல்லது காபி கிரைண்டர்

ஏர்டைட் கன்டெய்னர்

பேரீச்சம்பழம் சாப்பிட்ட பிறகு பேரீச்சம்பழ விதைகளை சேமிக்கவும். பழ எச்சம் எஞ்சியிருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த, அவற்றை நன்கு கழுவவும்.

விதைகளை கழுவிய பின் பேக்கிங் தாளில் பரப்பி, சில நாட்களுக்கு காற்றில் உலர வைக்கவும். பூஞ்சை வளர்ச்சியை நிறுத்த அவை நன்கு உலர்த்தப்பட்டிருப்பதை உறுதி செய்யவும்.

விதைகளை வறுக்கவும். ஓவன் டெம்பிரேட்சரை 200°C (390°F)க்கு அமைக்கவும்.

ஒரு பேக்கிங் தாளில் விதைகளை அடுக்கி சுமார் அரை மணி நேரம் பேக் செய்யவும். ரோஸ்டிங் சுவையை அதிகரிக்கிறது மற்றும் அரைப்பதை எளிதாக்குகிறது.

வறுத்த விதைகளை முழுமையாக குளிர நேரம் கொடுங்கள்.

விதைகள் குளிர்ந்தவுடன், அவற்றை ஒரு பிளெண்டர் அல்லது காபி கிரைண்டரைப் பயன்படுத்தி நன்றாக தூளாக அரைக்கவும். இதற்குச் சில நிமிடங்கள் ஆகலாம். அதிக அளவு விதைகள் இருந்தால், கொஞ்சம் கொஞ்சமாக அரைக்க வேண்டியிருக்கும், என்றார் சுஷ்மா.

குளிர்ந்த, உலர்ந்த இடத்தில் காற்றுப்புகாத கன்டெய்னரில் பேரீட்சை விதை பொடியை சேமிக்கவும்.

பேரீச்சம்பழத் தூளை எவ்வாறு பயன்படுத்துவது?   

உங்கள் ஸ்மூத்திகளுக்கு கூடுதல் ஊட்டச்சத்தை சேர்க்க, ஒரு டீஸ்பூன் பேரீச்சம்பழம் விதை தூளில் கலக்கவும். குக்கீ, ரொட்டி மற்றும் மஃபின் போன்ற பேக்டு பொருட்களில் தூள் சேர்க்கவும்.

காஃபியைப் போலவே பொடியையும் காய்ச்சி, சுவையான காஃபின் இல்லாத பானமாகத் தயாரிக்கவும், பகிர்ந்து கொண்டார் சுஷ்மா.

Read in English: This often-discarded seed may help control blood sugar levels; find out more

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment