Advertisment

சர்க்கரைக்கு பதிலாக பேரிச்சை சிரப் ; பண்றதும் எளிது - பயன்களும் பல

Dates syrup : பேரிச்சையை சாப்பிடுவதால் உடனடி ஆற்றல் கிடைக்கிறது.ஏனெனில் 100 கிராம் பேரிச்சையில் 282 கிலோ கலோரிகள் உள்ளது.

author-image
WebDesk
Jul 27, 2019 19:18 IST
New Update
dates, protein, sweetener, syrup, honey, பேரிச்சை, புரதம், இனிப்பு, தேன்

dates, protein, sweetener, syrup, honey, பேரிச்சை, புரதம், இனிப்பு, தேன்

பொதுவாகவே எப்படிப்பட்ட இனிப்பு பலகாரங்களை தயாரிப்பதற்கும் சர்க்கரையே பெரும்பாலும் சேர்க்கப்படுகிறது.

Advertisment

இது தவிர சாஸ், டிப், சாண்ட் விச் ஸ்ப்ரெட், குளிர்பானங்கள் போன்றவற்றிலும் சர்க்கரை சேர்க்கப்படுகிறது. இந்த உணவுகளால் உடலில் இரத்த சர்க்கரை மற்றும் இருதய நோய்கள் அதிகரிக்கிறது.

மேலும் மிக விரைவில் சருமத்தில் இளமை தோற்றத்தை போக்கி முதுமை தோற்றத்தை ஏற்படுத்திவிடுகிறது. இத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் சர்க்கரையை தவிர்த்து இயற்கையாகவே இனிப்பு சுவை மிகுதியான பேரிச்சையை எப்படி சேர்த்து கொள்வதென்று பார்ப்போம்.

பேரிச்சையின் நன்மைகள்

பேரிச்சையில் புரதம், நார்ச்சத்து, ஜிங்க், மாங்கனீஸ், மக்னீஷியம்,இனிப்பு போன்ற சத்துக்கள் இருக்கின்றன.

பேரிச்சையை சாப்பிடுவதால் உடனடி ஆற்றல் கிடைக்கிறது.ஏனெனில் 100 கிராம் பேரிச்சையில் 282 கிலோ கலோரிகள் உள்ளது. பேரிச்சை சிரப் கொண்டு கேக், கப் பேக், க்ரானோலா பார், புட்டிங், அல்வா, லட்டு மற்றும் பர்ஃபி போன்ற இனிப்புகளை தயாரிக்கலாம்.

பேரிச்சை பேஸ்ட் தயாரிக்க

பேரிச்சையை,வெதுவெதுப்பான நீரில் போட்டு சில மணி நேரங்கள் ஊற வைக்கவும். ஊறவைத்த பேரிச்சையை மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து கொள்ளவும். மேலும் உப்பு அல்லது பட்டைத்தூள் சேர்த்து கொள்ளவும், இந்த பேஸ்டை தேன் அல்லது மேப்பிள் சிரப்பிற்கு பதிலாக பயன்படுத்தலாம்.

பேரிச்சை சிரப் தயாரிக்க கொட்டை நீக்கிய பேரிச்சையை கொதிக்க வைத்து அந்த தண்ணீரை பயன்படுத்தலாம். இதே நீரை மிதமான சூட்டில் சில மணி நேரங்கள் கொதிக்க வைப்பதால் இனிப்பான பேரிச்சை சிரப் ரெடியாகிடும்.

#Food Recipes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment