Online dating | Indian Express Tamil

ஆன்லைனில் காதல் தேடுகிறீர்களா? கலவையான அனுபவங்களைக் காட்டும் புதிய ஆய்வு

10 அமெரிக்க அடல்ட்களில் 3 பேர் – கலவையான அனுபவங்களுடன் டேட்டிங் சைட் அல்லது ஆப்ஸ் பயன்படுத்தியதாகக் கூறுகிறார்கள்.

dating apps
Looking for love online? New study shows mixed experiences

வியாழன் அன்று வெளியான பியூ ரிசர்ச் சென்டர் ஆய்வின்படி, காதல் அல்லது சாதாரண சந்திப்பு எதை தேடினாலும், 10 அமெரிக்க அடல்ட்களில் 3 பேர் – கலவையான அனுபவங்களுடன் டேட்டிங் சைட் அல்லது ஆப்ஸ் பயன்படுத்தியதாகக் கூறுகிறார்கள். 35 வயதிற்குட்பட்ட செட்டில், பாதிக்கும் மேற்பட்டவர்கள் அதை முயற்சித்துள்ளனர்.

30% ஆக இருக்கும் மொத்த எண்ணிக்கை, 2019 முதல் மாறாமல் உள்ளது. 2015 ஆம் ஆண்டில், அமெரிக்க அடல்ட்களில், 15% பேர் டேட்டிங் சைட் அல்லது ஆப்ஸ் பயன்படுத்தியதாகக் கூறியதாக முன்னணி ஆராய்ச்சியாளர் கொலின் மெக்லைன் கூறினார்.

சமீபத்தில் இந்த தளங்களில் இருக்கும் பயனர்களுடன் நாங்கள் பேசும்போது, ​​​​உண்மையில் உணர்ச்சிகளின் கலவை இருப்பதைக் காண்கிறோம், என்று அவர் கூறினார். எரிச்சல் முதல் உற்சாகம் வரை அனைத்தும்.

McClain ஆய்வின் முக்கிய குறிப்புகளில்: ஏற்கெனவே துணை உள்ள இளம் வயதினர், 10 பேரில் ஒருவர், டேட்டிங் ஆப்பில் தங்களின் தற்போதைய குறிப்பிடத்தக்க மற்றவர்களை சந்தித்ததாகக் கூறினர்.

இந்த பிளாட்ஃபார்ம்களைப் பயன்படுத்துவதற்கான காரணங்களைக் கேட்டால், தற்போதைய அல்லது சமீபத்திய பயனர்களில் 44% பேர் நீண்டகால உறவை மனதில் கொண்டுள்ளனர், 40% பேர் கேஷூவல் டேட்டிங் செய்ய விரும்புவதாக பதிலளித்தனர். 24% பேர் கேஷூவல் செக்ஸ் தேடினர், 22 சதவீதம் பேர் புதிய நண்பர்களைத் தேடினர்.

30 வயதுக்குட்பட்ட இளம் வயதினரிடையே, டேட்டிங் சைட்ஸ் மற்றும் ஆப்ஸ் பயன்படுத்துவது மிகவும் பிரபலமாக உள்ளது, 53% பேர் தாங்கள் அதைச் செய்ததாகக் கூறியுள்ளனர். இது 30 முதல் 49 வயதுடையவர்களில் 37% ஆகவும், 50 முதல் 64 வரை 20%; 65 மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் 13% ஆகவும் உள்ளது.

அட்லாண்டா தீயணைப்பு வீரர் ஆண்டி ஜிரோன் 33, இன்ப அதிர்ச்சியில் உள்ளார். சமீப காலம் வரை டிஜிட்டல் டேட்டிங் “கொஞ்சம் வித்தியாசமானது, என்று தான் எப்போதும் கருதியதாக அவர் கூறினார்.

ஜிரோன் 2019 இல் ஒரு நீண்ட கால உறவில் இருந்து பிரிந்தார், அப்போது அவர் டிண்டரை சில கேஷூவல் டேட்டிங்கிற்கு முயற்சிக்க முடிவு செய்தார். இரண்டு முறைக்குப் பிறகு அது பலனளிக்கவில்லை, ஆனால் சிறிது காலம் கழித்து அவர் ஹிங்கில் (Hinge) தங்கத்தை கண்டுபிடித்தார்.

ஹிங்கில், என் மனைவி தான் எனது முதல் டேட்டிங். அவள் பழகுவதற்கு எளிமையானவள். எங்களுக்கு நிறைய பொதுவான விஷயங்கள் இருந்தது. நாங்கள் முதலில் நேரில் சந்தித்தபோது, ஒரு நல்ல தொடர்பு இருந்தது.

இருவரும் ஆறு மாதங்களுக்குப் பிறகு, கொரோனா தொற்றுநோய் தாக்கிய போது திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தற்போது ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. ஜிரோன் தனது சகோதரியால் ஆன்லைன் டேட்டிங் செய்ய தூண்டப்பட்டார், அவர் கூட தனது இணையை அதே வழியில் தான் கண்டுபிடித்தார்.

நீங்கள் யாரையாவது வழக்கமான வழியில் நேரில் சந்திக்க வேண்டும் என்று நான் எப்போதும் நினைத்தேன், ஆனால் இப்போது உலகம் இப்படித்தான் இருக்கிறது, என்று ஜிரோன் கூறினார்.

51% லெஸ்பியன், கே மற்றும் பை செக்ஸுவல் அடல்ட்ஸ், டேட்டிங் தளம் அல்லது ஆப்ஸைப் பயன்படுத்தியுள்ளனர். டிஜிட்டல் டேட்டிங்கில் பெண்களை விட ஆண்களே அதிகம், நேர்மறை அனுபவங்களை பெறுகின்றனர்.

கடந்த ஆண்டு ஜூலை 5-17 வரை எடுக்கப்பட்ட சுமார் 6,000 யு.எஸ் அடல்ட்ஸிடம் எடுக்கப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த Pew ஆராய்ச்சி அமைந்துள்ளது.

ஆன்லைன் டேட்டர்ஸ் அனுபவங்கள் கலவையாக இருந்தன, இதில் 53% பேர் ஓரளவு பாசிட்டிவ்வாக இருப்பதாகக் கூறினர். 14% பேர் தாங்கள் மிகவும் பாசிட்டிவ்வாக இருப்பதாகக் கூறியுள்ளனர், 48% பேர் தாங்கள் செய்த தேவையில்லாத நடத்தைகளில் இதுவும் ஒன்று என்றனர்.

38 % பேர் எதிர்மறையான அனுபவங்களைப் புகாரளித்தனர். மேலும் 30% தேவையற்ற தொடர்பை மேற்கோள் காட்டினர். 24 சதவீதம் பேர் தாங்கள் புண்படுத்தும் பெயராக அழைக்கப்பட்டதாகவும், 6% பேர் உடல் ரீதியாக அச்சுறுத்தப்பட்டதாகக் கூறினர்.

பெண் பயனர்கள், குறிப்பாக 50 வயதிற்குட்பட்டவர்கள் இதுபோன்ற அனுபவங்களைப் புகாரளித்தனர்.

ஜிரோனைப் போலவே, கலிபோர்னியாவின் சான் ஜோஸில் உள்ள 22 வயதான லிவ் லௌக்லின், கடந்த செப்டம்பரில் டிஜிட்டல் டேட்டிங்கை முதன்முதலில் முயற்சித்தபோது நீண்ட கால உறவை முடித்துக் கொண்டார்.

நான் அதில் குதிக்க விரும்பினேன், குறிப்பாக நான் அந்த பகுதிக்கு புதியவர் என்பதால் மக்களை சந்திக்க விரும்பினேன். ஹிங்கில் தான் எனது முதல் டேட்டிங் இருந்தது, அது வேடிக்கையாக இருந்தது. அவனுடன் உடனே நெருக்கம் வந்தது. அவன் சொன்ன எல்லாவற்றிலும் இந்த பாலியல் மேலோட்டங்கள் இருந்தன. … நான் அதிலிருந்து வெளியே வந்துவிட்டேன்.

ஆனால் லௌக்லின் அதை விடவில்லை. அவள் மீண்டும் திரும்பினாள், இப்போது அவள் அங்கு சந்தித்த ஒரு மனிதனுடன் மகிழ்ச்சியாக உறவில் இருக்கிறாள்.       

சில டிஜிட்டல் டேட்டர்களுக்கு பாதுகாப்பு என்பது ஒரு பெரிய கவலை. ஸ்டாக்கிங், பாலியல் வன்கொடுமைகள் மற்றும் பிற வன்முறைகளின் வெளிச்சத்தில், தேவைப்படும் பின்னணி சோதனைகள் போன்ற கூடுதல் பாதுகாப்புகளுக்கான கோரிக்கைகள் பல ஆண்டுகளாக உள்ளன. சில தளங்களுக்கு ஒவ்வொரு பயனருக்கும், இத்தகைய சோதனைகள் தேவைப்படுகின்றன.

அமெரிக்கர்கள் இதில் பிளவுபட்டிருப்பதை நாங்கள் காண்கிறோம், என்று மெக்லைன் கூறினார். டேட்டிங் தளங்கள், மக்களைச் சந்திக்க பாதுகாப்பான வழி என்று நாற்பத்தெட்டு சதவீதம் பேர் கூறுகின்றனர். அதேபோல 49%, பாதுகாப்பாக இல்லை என்று கூறுகிறார்கள்.

டேட்டிங் தளங்கள் மற்றும் ஆப்ஸ்க்கு, மக்கள் பின்னணி சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஒட்டுமொத்தமாக பெரும்பான்மையானோர் கூறியுள்ளனர்.

சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ஸ்டேசி ஓவர்கேம்ப், 58, ஒரு வேலையில்லாத மார்க்கெட்டிங் நிபுணர், ஆபத்துக்களை நேரில் சந்தித்திருக்கிறார். அவர் 1998 ஆம் ஆண்டு முதல் ஆன்லைனில் டேட்டிங் செய்து வருகிறார், பல தொடர்புகள் பல ஆண்டுகளாக உறவுகளுக்கு வழிவகுத்தன.

ஆன்லைனில் ஆண்களைச் சந்திப்பதில் எனக்குப் பிரச்சினை இருந்ததில்லை. நல்ல ஆண்களை ஆன்லைனில் சந்திப்பதில் தான் எனக்கு சிக்கல் உள்ளது, ஸ்டாக்கிங், துன்புறுத்தலால், ஒரு நீண்ட கால உறவு முடிந்தது என்று அவர் கூறினார்.

அவள் டேட் செய்த மற்ற ஆண்கள் உடைந்தவர்கள், போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் அல்லது பொய்யர்களாக மாறினர். ஆனால் அவளது முன்னுரிமைகள் இப்போது திருமணத்திற்கு மாறிவிட்டதால் இப்போது அவர் சுறுசுறுப்பாக இருக்கிறார்.

“நான் ஆன்லைனில் இல்லாவிட்டால், பல ஆண்களுடன் பேசுவதற்கும் தொடர்புகொள்வதற்கும் எனக்கு ஐந்து வருடங்கள் ஆகும்,” என்று அவர் கூறினார்.

பியூ எட்டு சைட்ஸ் மற்றும் ஆப்ஸ்களை ஆய்வு செய்தது. இதில் டிண்டர் மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்பட்டது, 46% டிஜிட்டல் டேட்டிங் பயனர்கள் அதை முயற்சித்ததாகக் கூறுகிறார்கள். இது அனைத்து அமெரிக்க அடல்ட்களில், 14% ஆகும்.

U.S. அடல்ட்களில் சுமார் 10% பேர் Match அல்லது Bumble பயன்படுத்தியதாகக் கூறினர். OkCupid, eharmony மற்றும் Hinge ஆகியவற்றை முயற்சித்ததாக ஆறு சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

Grindr மற்றும் HER ஆனது லெஸ்பியன், ஓரினச்சேர்க்கை அல்லது பை செக்ஷூவல் ஆன்லைன் டேட்டிங் பயனர்களிடையே மிகவும் பிரபலமாக இருந்தது. எல்ஜிபி பயனர்களில் 34% பேர் Grindr முயற்சித்ததாகவும், 10% பேர் HER முயற்சித்ததாகக் கூறினர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Dating apps online dating study online dating experiences