ஹைப்பர்சோனொலென்ஸ் என்ற பதம், இரவில் 7 முதல் 8 மணி நேரம் தூங்கிய பின்னரும், பகலில் அதிக நேரம் தூங்குவதை குறிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
ஹைப்பர்சோனொலென்ஸ் என்ற பதம், இரவில் 7 முதல் 8 மணி நேரம் தூங்கிய பின்னரும், பகலில் அதிக நேரம் தூங்குவதை குறிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
daytime sleepiness, hypersomnolence , diabetes risk, sleepiness cancer risk, what is hypersomnolence, hypersomnolence causes, indian express news
ஹைப்பர்சோனொலென்ஸ் என்ற பதம், இரவில் 7 முதல் 8 மணி நேரம் தூங்கிய பின்னரும், பகலில் அதிக நேரம் தூங்குவதை குறிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
Advertisment
சர்க்கரை நோய், கேன்சர், முதியவர்களுக்கு ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படுவதற்கு காரணமே பகலில் தூங்குவதுதான் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
Advertisment
Advertisements
ஹைப்பர்சோனொலென்ஸ் என்ற பதம், இரவில் 7 முதல் 8 மணி நேரம் தூங்கிய பின்னரும், பகலில் அதிக நேரம் தூங்குவதை குறிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இது சிலரை பலவீனப்படுத்துவதுடன், அவர்களின் அன்றாட பணிகளையும் பாதிக்கிறது.
முதியவர்களின் இந்த தூக்கம் குறித்து கவனம் செலுத்தும்போது, எதிர்காலத்தில் இந்த பிரச்னைக்கான தீர்வை கண்பிடிக்க மருத்துவர்களுக்கு உதவும் என்று அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வுக்கட்டுரையின் எழுத்தாளர் மவுரைஸ் எம் ஒஹாயான் கூறுகிறார்.
முதியவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர், அவர்களின் தூக்க பழக்கம் குறித்து கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். அதன்மூலம் அதில் உள்ள ஆபத்து மற்றும் அது ஏற்படுத்தக்கூடிய தீவிரமான மருத்துவ நிலை ஆகியவற்றை புரிந்துகொள்ள வேண்டும் என்று ஒஹையான் கூறுகிறார். இந்த ஆய்வில் 10,930 பேர் கலந்துகொண்டார்கள். அதில் 34 சதவீதத்தினர் 65 வயதானவர்கள். ஆராய்ச்சியில் கலந்துகொண்டவர்களை இரண்டு முறை போன் மூலம் தொடர்புகொண்டு ஆராய்ச்சியாளர்கள் பேசினார்கள். முதல்முறை பேசும்போது, 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 23 சதவீதம் பேர் பகலில் அதிக நேரம் தூங்கும் பழக்கம் கொண்டவர்களாக இருந்தனர். இரண்டாவது முறை பேசும்போது, 24 சதவீதம் பேர் பகலில் அதிக நேரம் தூங்கும் பழக்கம் உள்ளதாக தெரிவித்திருந்தனர். அதில் 41 சதவீதம் பேர் பகலில் அதிக நேர தூக்கத்தை நாள்பட்ட பிரச்னையாக கருதினர்.
முதல்முறை போனில் பேசியதில், பகலில் அதிக நேர தூக்கத்தை உணருபவர்களுக்கு, அதை உணராதவர்களை விட, மூன்று ஆண்டுகள் கழித்து சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுத்துவற்கான ஆபத்து அதிகமுள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.
கேன்சர் வருவதற்கு இருமுறை வாய்ப்புகள் அதிகமுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். முதல்முறை போனில் பேசிய 840 பேரில், தூங்குவதாக கூறிய 52 பேர் அல்லது 6.2 சதவீதத்தினருக்கு, பகலில் தூங்குவதில்லை என்று பதிலளித்த 74 பேர் அல்லது 2.9 சதவீதத்தினரை விட அதிகளவில் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.
அந்த 840 பேரில், தூங்குவதாக கூறிய 20 பேர் அல்லது 2.4 சதவீதத்தினருக்கு, பகலில் தூங்காத 21 பேர் அல்லது 0.8 சதவீதத்தினரைவிட, அதிகளவில் கேன்சர் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. பாலினம் உள்ளிட்ட சில காரணிகளை ஆராய்ச்சியாளர்கள் மாற்றியபோதும், முடிவுகள் ஒன்றாகத்தான் இருந்தது.
இரண்டு முறை பேசியபோதும், பகலில் தூங்குவதாக கூறியவர்களுக்கு, இரண்டரை முறை அதிகம் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
இரண்டாவது முறை பேசியபோது மட்டும், பகலில் தூங்குவதாக தெரிவித்த 50 சதவீதம் பேருக்கு, தசை கூட்டு தொடர்பான ஆர்த்தரட்டிஸ், டென்டினிடிஸ் மற்றும் லியூப்பஸ் போன்ற வியாதிகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாகவும், பகலில் தூங்காதவர்களுக்கு இந்த பாதிப்புகள் ஏற்படாது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். தங்கள் உறக்கத்தின் ஆழம் மற்றும் தரம் குறித்து, பங்கேற்பாளரின் நினைவுகளைப் பொறுத்தே இந்த ஆய்வின் நம்பகத்தன்மை இருக்கும். இந்த ஆய்வின் முடிவுகள், ஏப்ரல் 25 முதல் மே 1ம் தேதி வரை கனடா, டொராண்டோவில் நடக்கவுள்ள, அமெரிக்காவின் நரம்பியல் மையத்தின், ஆண்டு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
தமிழில் : R.பிரியதர்சினி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil