கருத்தரிக்க வேண்டும் என நினைப்பவர்களுக்காக பிரத்யேகமாக சில பொருட்கள் சந்தையில் விற்பனையாகின்ன்றன. ஆனால், அப்படி நினைப்பவர்கள் உபயோகிக்கக் கூடாது என சொல்லும் அளவுக்கு ஒரு பொருள் உள்ளது. ஏனென்றால், யோகா செய்ய பயன்படுத்தப்படும் யோகா மேட்டில் பயன்படுத்தப்படும் ரசாயணங்களால், கருத்தரித்தல் குறைபாடுகள் ஏற்படும் என அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.
Environmental Health Perspectives என்ற ஆராய்ச்சி இதழில் இதுகுறித்த ஆய்வு வெளியாகியுள்ளது. மருந்துகள், குழந்தை தயாரிப்புகள் மற்றும் உடற்பயிற்சிக்கான பொருட்கள் உட்பட பல்வகை தயாரிப்புகளில், பாலியூரிதீன் நுரைகளில் பயன்படுத்தப்படும் ஆர்கனோபாஸ்பேட் எனப்படும் ஒரு வகை ரசாயணம் யோகா மேட்டுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இதனால், மற்ற பெண்களைக் காட்டிலும், சிறுநீர் செறிவு கொண்ட பெண்களுக்கு கர்ப்பமடைவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது என இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதனால், குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என விரும்பும் தம்பதிகள், ஆர்கனோபாஸ்பேட் உள்ளிட்ட ரசாயனங்கள் அடங்கிய யோகா மேட்டுகள் உள்ளிட்ட எந்தவித தயாரிப்புகளையும் பயன்படுத்த வேண்டான் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.