சீரியல் நடிகை தீக்ஷன்யாவுக்கு தம்பி பாப்பா? மகள் விருப்பப்படி மறுமணம் செய்த அம்மா சொன்ன ஹேப்பி நியூஸ்

அவ வளர்ந்த போது அவகூட முழுசா இருக்க முடியாம போயிடுச்சுனு ஒரு வருத்தம் எனக்கு இருக்கு. அதனால, இப்போ என்னுடைய எல்லா நேரத்தையும், என்னுடைய பொண்ணுக்காக மட்டுமே கொடுக்கணும்னு நினைக்கிறேன்.

அவ வளர்ந்த போது அவகூட முழுசா இருக்க முடியாம போயிடுச்சுனு ஒரு வருத்தம் எனக்கு இருக்கு. அதனால, இப்போ என்னுடைய எல்லா நேரத்தையும், என்னுடைய பொண்ணுக்காக மட்டுமே கொடுக்கணும்னு நினைக்கிறேன்.

author-image
WebDesk
New Update
Dheekshi Actress

Actress Dheekshi

நடிகை தீக்ஷன்யா தற்போது அம்மா, அப்பாவுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். தீ‌க்ஷன்யாவை குழந்தையில் இருந்து வளர்த்ததே அவரது தாய் ஜான்சி தான். 19 வயதிலே ஒரு பெண் குழந்தைக்கு தாயான ஜான்சி, தன் கணவர் போதைக்கு அடிமையானதால் அவரை பிரிந்து வாழ்ந்து, தனியாக தீக்ஷியை வளர்த்தார். இப்போது ஜான்சிக்கு 34 வயதாகிறது. 

Advertisment

தன் அம்மா தனியாக இருப்பதைப் பார்த்த வருத்தப்பட்ட தீக்ஷி தன் அம்மாவுக்கு  திருமணம் செய்து பார்க்க ஆசைப்பாட்டார். அம்மாவின் சிறுவயது பள்ளித் தோழரான சந்தோஷ்குமாரை தீக்ஷியே மணம் செய்து வைத்தது சோஷியல் மீடியா முழுவதும் பேசுபொருளாகியது.

இந்நிலையில் பலரும் அவரது அம்மாவிடம், “நீங்கள் ஏன் இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை?” என்று தொடர்ந்து கேட்டு வந்தனர். அண்மையில் ஜான்சி வெளியிட்ட ஒரு வீடியோவில் இதற்கான பதிலைத் தெளிவாகவும், உணர்வுபூர்வமாகவும் பகிர்ந்துள்ளார். 

நீங்க ஏன் இன்னொரு குழந்தை பெத்துக்கல? இந்த கேள்விக்கு என் கணவரே பதில் சொல்வாரு, என்று ஜான்சி தன் கணவர் சந்தோஷ்குமாரிடம் மைக்கை கொடுக்கிறார். அதற்கு சந்தோஷ்குமார் சொன்ன காரணங்கள் ரொம்ப ஆழமானவை. 

Advertisment
Advertisements

'என்னுடைய பொண்ணுக்கு என்னுடைய முழு அன்பையும், முழு கவனத்தையும், முழு அர்ப்பணிப்பையும் கொடுக்கணும்னு நினைக்கிறேன். அவ வளர்ந்த போது அவகூட முழுசா இருக்க முடியாம போயிடுச்சுனு ஒரு வருத்தம் எனக்கு இருக்கு. அதனால, இப்போ என்னுடைய எல்லா நேரத்தையும், என்னுடைய பொண்ணுக்காக மட்டுமே கொடுக்கணும்னு நினைக்கிறேன்.

ஒரு குழந்தை வந்தா, முதல் குழந்தைக்கு கிடைக்க வேண்டிய கவனம் குறைஞ்சுபோகலாம். அந்த புறக்கணிப்பு என் பொண்ணுக்கு வந்துடக்கூடாது. என்னுடைய பொண்ணு கல்யாணம் பண்ணி போற வரைக்கும் அவளுக்கு முழு ஆதரவா நான் இருக்கணும். அவளோட எல்லா ஆசைகளையும் நிறைவேற்றணும்'னு சந்தோஷ் குமார் எமோஷனலாக பேசினார். அவர் பேசியதைக் கேட்ட ஜான்சியும்  இந்த முடிவை நானும் முழுசா ஏத்துக்கிட்டேன் என்றார். 

எனக்குக் கிடைத்த பரிசு!

ஏழு வருஷமா நான் வாராஹி அம்மனை வழிபடுறேன். நான் எதுவும் அவங்கிட்ட கேட்டது கிடையாது. ஆனா, அவுங்களோட அருளால எனக்கு ரொம்ப நல்ல வாழ்க்கை அமைஞ்சது. முக்கியமா, எனக்குக் கிடைச்ச பரிசு என் கணவர் சந்தோஷ். அவர் ஒரு நல்லவர், தைரியமானவர், நேர்மறையான எண்ணங்கள் கொண்டவர். 18 வருஷமா முருக பக்தரா அவர் இருக்கிறதால, அவருடைய மனசுல அன்பு மட்டுமே இருக்கு.

அதனால, இன்னொரு குழந்தை வேண்டாம்னு நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்திருக்கோம். இது எங்களுடைய தனிப்பட்ட முடிவு. நம்ம லைஃப்ல நாமதான் சரியான முடிவை எடுக்கணும், அதுவும் நம்ம மனசுக்கு பிடித்த முடிவை, என்று புன்னகையுடன் முடிக்கிறார், ஜான்சி.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: