சில நேரங்களில், வாழ்க்கையில் மிகவும் அழுத்தமான விஷயங்களுக்கு தீர்வு சில நிமிடங்கள் ஆழ்ந்த மூச்சு எடுப்பதுதான். இது நரம்புகளை அமைதிப்படுத்துகிறது. நடிகை ஸ்வேதா கவாத்ராவும் இதையே கடைப்பிடிக்கிறார்.
எனது அனுபவத்தில், நான் மன அழுத்தமாக இருக்கும் போது, கவலையாக உணரும் போது என் சுவாசம் ஆழமில்லாமல் இருப்பதை உணர்ந்தேன்.
ஆனால் எப்படி? நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கும்போது அல்லது ஏதாவது ஒரு விஷயத்தில் ஆழ்ந்த கவனம் செலுத்தும்போது, உங்கள் சுவாசத்தைக் கவனியுங்கள். அது ஆழமற்றதாக இருக்கும்.
எனவே மன அழுத்தத்தால் பாதிக்கப்படும்போது, குறிப்பாக, மெதுவாகவும் ஆழமாகவும் சுவாசிக்க மனதிற்கு பயிற்சி அளிக்க முயற்சிப்பதாக ஸ்வேதா பகிர்ந்து கொண்டார். நீங்களும் இதை முயற்சி செய்யுங்கள் என்று அவர் இன்ஸ்டா வீடியோவில் கூறினார்..
இருதயவியல் ஆலோசகர் டாக்டர் சித்தார்த்த மணி, ஆழ்ந்த சுவாசம், மன அழுத்தத்திற்கு இயற்கையான பதில் என்று பகிர்ந்து கொண்டார்.
பல நேரங்களில், கடின உழைப்புக்குப் பிறகு (மனம் மற்றும் உடல் இரண்டும்) ஆழ்ந்த மூச்சு எடுக்கிறோம். இருப்பினும், இந்த ஆழ்ந்த மூச்சுப் பயிற்சியின் மூலம் நமது இதயம் மற்றும் மூளையில் நிகழும் நன்மைகளை நாம் அறியாமல் இருப்போம், என்று அவர் கூறினார்.
மன அழுத்த சூழ்நிலை ஏற்படும் போதெல்லாம், நமது உடல் மன அழுத்த ஹார்மோன்கள், இதய துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை அதிகரிப்பதன் மூலம் எதிர்வினையாற்றுகிறது. இது இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் பலவீனமான நோயாளிகளுக்கு, மாரடைப்பு, இதய செயலிழப்பு, அரித்மியா, மூளை பக்கவாதம் மற்றும் ரத்தப்போக்கு கூட தூண்டலாம்.
ஆழ்ந்த சுவாசம், இதய துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது,
இது மன அழுத்த ஹார்மோன்களைக் குறைக்கவும், உடல் மற்றும் மனதை அமைதிப்படுத்தவும் உதவுகிறது என்று நிபுணர் கூறினார்.
மேலும், ஆழ்ந்த சுவாசம், நுரையீரலில் ஆக்ஸிஜன் பரிமாற்றத்தை எளிதாக்குகிறது, இதனால் மூளைக்கு ஆக்ஸிஜன் விநியோகத்தை அதிகரிக்கிறது. இது கவனத்தை மேம்படுத்தவும், பதட்டத்தை குறைக்கவும் உதவுகிறது.
இது தசை பதற்றத்தை குறைக்க உதவுகிறது.
எனவே, வழக்கமான ஆழ்ந்த சுவாச பயிற்சி, நம் உடலுக்கும் மனதுக்கும் பல நன்மையான வழிகளில் உதவுகிறது, மற்றும் மன அழுத்த சூழ்நிலைகளை எதிர்த்துப் போராட உதவுகிறது, என்று அவர் முடித்தார்.
Read in English: Shweta Kawaatra suggests taking slow and deep breaths in stressful situations; here’s how it helps
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“