சுடுகாடு பக்கத்தில் வந்தபின் வீடு மாடி வீடா ஆகிருச்சு; எனக்கு அது கோவில்தான்; தீபா அக்கா ஹோம் டூர்

நடிகை தீபாவின் ஹோம் டூர் விடியோ ஒன்றில் தன்னுடைய சினிமா மற்றும் சீரியல் பயணங்கள் குறித்து மணம் திறந்து பேசியுள்ளதை பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

நடிகை தீபாவின் ஹோம் டூர் விடியோ ஒன்றில் தன்னுடைய சினிமா மற்றும் சீரியல் பயணங்கள் குறித்து மணம் திறந்து பேசியுள்ளதை பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
deepa akka

வெறும் ரூ.170 முதல் ரூ.1,500 வரைதான் சாரீஸ்... ஓல்ட் மெமரி போட்டோஸ்; தீபா அக்கா ஹோம் டூர் வைரல்!

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என 2 துறைகளிலும் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை தீபா. சமீபத்தில், JFW Binge யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தனது வீடு, குடும்பம், சினிமா பயணம் என பல விஷயங்களைப் பற்றி மனம் திறந்து பேசினார்.

Advertisment

தீபா தனது நடிப்பு வாழ்க்கையை 2002-2003ஆம் ஆண்டில் சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி தொடர் மூலம் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து, சித்தி, அண்ணாமலை, சாரதா, கோலங்கள் போன்ற பல வெற்றித் தொடர்களில் நடித்து சின்னத்திரை ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமானவர் ஆனார். குக் வித் கோமாளி 2, மிஸ்டர் அண்ட் மிஸ்டர் சின்னத்திரை 3, டாப் குக்கு டூப் குக்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிஸியான நடிகையாக உலா வருகிறார். 

பல ஆண்டுகளாக திரைப்படங்களில் நடித்து வந்தாலும், அவருக்கு பெரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. நடிகர் கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் (2018) திரைப்படம் அவரது சினிமா வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்தப் படத்தில் நடித்தபோதுதான், நடிகர் கார்த்தி அவரை முதன்முதலில் "தீபா அக்கா" என்று அழைத்தார். அந்தப் பெயரே அவருக்கு பிரபலத்தையும், பரவலான அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்தது. சமீபத்தில், விஜய் சேதுபதியுடன் 'தலைவன் தலைவி' படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தீபா தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மறக்க முடியாத தருணம் குறித்து மனம் திறந்து பேசினார். தனது தாயார் இறந்த அதே நாளில், சீரியலுக்காக டப்பிங் பேசச் சென்றதாக அவர் உருக்கத்துடன் கூறினார். "வாழ்க்கையில் அடுத்தது என்னவோ, அதைச் செய்ய வேண்டும்" என்று தனது அம்மா கற்றுக்கொடுத்த பாடமே அந்த இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்ள உதவியதாகவும், அது தனது வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Advertisment
Advertisements

அவரது வீட்டின் பின்புறம் சுடுகாடு இருப்பதால் பயமாக இருக்குமா? என்ற கேள்விக்கு, அது தனக்கு நேர்மறை ஆற்றலைத் தருவதாகப் பதில் அளித்தார். இந்த 3 மாடி வீட்டினை கட்ட என் வீட்டில் போட்ட 40 பவுன் நகையை விற்றுத்தான் கட்டுகிறோம். என் பேரப்பிள்ளைகள் பாதுகாப்பாக விளையாடும் படி கட்டி வருகிறேன் என்றும் தீபா தெரிவித்துள்ளார். மேலும், என் கல்யாணத்திற்கு முன்பே இந்த இடத்தை நிலமாக வாங்கி போட்டது. அதன்பின் 40 பவுன் நகையை வித்து இந்த வீட்டை கட்டினோம். மேலும், எங்க வீட்டுக்கு பின்னாடி ஒரு சுடுகாடு இருக்கு, முதலில் நாங்கள் வரும் போது பயமுறுத்தினார்கள். ஆனால் அந்த சுடுகாடு பக்கத்தில் வந்தப்பின் தான், அந்த ஆசீர்வாதமோ என்னமோ தெரியல, வீடு மாடிவீடா ஆகிட்டு. அதனால் அதை சுடுகாடா பார்க்கமாட்டேன், கோவிலா கும்பிட்டுக்குவேன் என்றார் தீபா.

மேலும், தனது கணவருடனான உறவு, புடவைகள் மீதான ஆர்வம் அதிலும் குறிப்பாக தன்னிடம் வெறும் ரூ.170 முதல் ரூ.1,500 வரையில் மட்டுமே புடவைகள் உள்ளதாகவும் பார்ப்பதற்கு பட்டுபோல இருக்கும் என்றும் என்றும் தீபா குறிப்பிட்டார்.  நடன ஆசிரியராக இருந்த பணி குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.  கடின உழைப்பு மற்றும் திறமையால் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் உயர்ந்துள்ள தீபா, தனது பயணத்தில் தனக்கு உறுதுணையாக இருந்த தனது தாயார் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவை நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: