பொட்டுக்கடலை வைத்து பாரம்பரிய முறையில் இப்படி ஸ்வீட் செய்யுங்க. ரொம்ப ஈசியான ரெசிபி.
தேவையான பொருட்கள்
1 கப் பொட்டுக்கடலை
அரை மூடி தேங்காய்
1 கப் வெல்லம்
அரை கப் தண்ணீர்
நெய் 2 ஸ்பூன்
ஒரு சிட்டி கை ஏலக்காய் தூள்
ஒரு சிட்டிகை உப்பு
1 கப் இட்லி மாவு
கால் கப் மைதா மாவு
ஆப்ப சோடா
பொறிக்கும் அளவு எண்ணெய்
செய்முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து பொட்டுக்கடலை சேர்த்து நன்றாக கிளர வேண்டும். தொடர்ந்து இதை மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுத்துகொள்ளவும். இதுபோல தேங்காய் துருவி எடுத்துகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து வெல்லம் சேர்த்து கரைக்க வேண்டும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து அரைத்த பொட்டுக்கடலையை சேர்க்கவும். அதை கிளர வேண்டும். அதில் வெல்ல பாகை ஊற்றி கிளரவும். தேங்காய் துருவியதை சேர்க்கவும். ஏலக்காய் தூள் சேர்க்கவும். தொடர்ந்து இட்லி மாவில், மைதா மாவு சேர்த்து, ஆப்ப சோடா சேர்க்கவும். தொடர்ந்து செய்து வைத்த பொட்டுக்கடலை பூரணத்தை சிறிய உருண்டைகளாக பிடித்து மாவில் முக்கி, பொறித்து எடுக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“